ஓர் இரவு பகலானது
முகவரி தெரியாத முகங்களும்
முன்னுரையை வைக்கின்றனர் புத்தாண்டு நல்வாழ்த்துகளை
பகலானது கடற்கரையின் ஓரம்
அலங்கரிக்கப்பட்ட கலங்கரை விளக்கால்,
சின்ன சின்ன பந்துகள்
அதிலும் சின்ன சின்ன மின்மினி வெளிச்சங்கள்
வானத்தை தொட பார்க்கிறது
சின்ன சின்ன குழந்தையின் கைகளால்..,
வண்ணம் பூசப்படாத ஒரு வானவில்
தோன்றி மறைகிறது
பட்டாசின் பூ பந்துகளால்..,
தாளங்களும்
தள்ளாடிய நடனங்களும்
வேடிக்கை பார்க்கிறது ஒவ்வொரு
கூட்டங்களும்..,
வட்டமாய் அமர்ந்து
வத்தலையை தின்று
வடிகட்டுகின்றனர்
வண்ணம் காட்டிய கடந்த ஆண்டு நினைவுகளை
முகப்புதிரை படங்களும்
முகவரி தெரியாத ஜனங்களும்
மூடப் பார்கின்றனர்
முடிவுரை தெரிந்த இந்த ஆண்டுக்கு
பாதுகாப்பு கட்டிடத்தில்
பதிய பட்ட நிமிடங்கள்
வண்ணமாய் மாறிக்கொண்டு யிருக்கிறது
வருடம் பிறப்பதை சொல்ல ..,
தேடப்பட்ட நெஞ்சங்கள்
மறையபட்ட நண்பர்கள்
மௌனமாய் சொல்கிறது
பேச தெரியாத நினைவுகள்
சாரலே யில்லாத காற்றில்
சாக நினைத்தவர்களும்
சோதனையை கடந்தவர்களும்
சாதிக்க சொல்கின்றனர்
அதை கத்தி சொல்கின்றனர்
புத்தாண்டு நல்வாழ்த்துகளை ..,
கடல் அலையின் சத்தமும் ஓரம் கட்டும்
கடற்கரை மேல் நின்று மானிடர் சொல்லும்
புத்தாண்டு ஊக்குரலால் ...,
தெரு ஓரம்
அங்கு தெளிக்கப்பட்ட கோலங்கள்
அதில் பூசப்பட்ட வண்ணங்கள் சொல்கிறது
புத்தாண்டு நல்வாழ்த்துகளை ..
சாலை எங்கும்
இளமைகளின் கூட்டம்
யார் என்று தெரியப்படாத அன்பர்களும்
தோல் சாய்த்து சொல்லும்
புத்தாண்டு நல்வாழ்த்துகளை
வா வா என்று சொல்கிறது
ஒரு பக்கம்
வருகின்றேன் என்று சொல்கிறது
இன்னொரு பக்கம்
வருடத்தின் பிறப்புகளும் இறப்புகளும்
எழுதப்பட்ட பக்கங்கள்
நிரம்பி கொண்டே வருகிறது
எழுதப்படாத பக்கங்களும்
திறந்து கொண்டே வருகிறது
அதில் எழுதப்பட்ட
நினைவுகள்தான் மிஞ்சுகிறது
எண்ணப்படும் நாட்களும் அல்ல
கணக்குகளை சொல்லும் வருடங்களும் அல்ல
தேயாத லட்சிங்களோடு
மீண்டும் பிறப்போம்
இப்புத்தாண்டில்
அனைவருக்கும் என் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!!!