உனக்கு நன்றி

ஆர்ப்பரித்து கொண்டிருந்த
இதயக்கடலில்..
ஏன் இத்தனை சாந்தம் இன்று

அட..!! என் இதயத்திற்கு
சிரிக்கக்கூட தெரிந்திருக்கின்றது
நிலைக்குமா இது..? ?

உனக்காக கவி எழுத
ஆசை வந்து -யாரோயாரோ! !
என்று சிரித்தது..!!
இமையோரம் கண்ணீர்
நன்றி பூக்களாய்
ஜொலித்தது..

முகம் கண்ட இதயங்கள்
மனமுடைத்த வேளையிலும்
முகமறியா நட்பில்
அகம் மகிழ்ந்தது உண்மைதான்..!!

இருந்தும் என்ன
உதறிச் செல்லும்
உறவுகளை.. உறவு செய்து
உதவி செய்யும்
உறவுகளை தூரம்
வைத்து விளையாடுவது
அவன் பொழுதுபோக்கு..

நன்றி மலர் தூவுகிறேன்
என்றாலும்
விதி வலியது..
விதி வலி மிக்கது..!!!

இவள் நிலா

எழுதியவர் : இவள் நிலா (2-Jan-16, 7:20 am)
Tanglish : unaku nandri
பார்வை : 448

மேலே