கொலுசு ஒலி

கொலுசு ஒலி
ஒளிந்துள்ளதே!
கொலுசுகளுக்குள்…
இனிய ஓசை!

இனிய ஓசை
கொலுசுகளணிந்த
பெண்கள்
மனதிலோ…
ஆயிரம் ஆசைகள்!

ஆயிரம் ஆசைகளுக்குள்…
அடங்கியுள்ளதே
இலட்சியங்கள்!

இலட்சியங்களுக்குள்….
இணைந்துள்ளதே
இலக்குகள்!

இலக்குகளுக்குள்
இழையோடுகிறதே
வெற்றிகள்!

வெற்றிகளுக்குள்
படர்கிறதே
வெளிச்சங்கள்!

வெளிச்சமான
வாழ்க்கைக்கு
வேண்டுமே
முயற்சிகள்!

முயற்சியோடிரு
முன்னேறு…முன்னேறு!
வையகமே…. உன்முன்
மண்டியிடும்!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (2-Jan-16, 8:12 pm)
பார்வை : 277

மேலே