ஆமை

அது ஒரு வசந்த காலம் ,அடர்ந்த வனம் மழை நன்றாக பொழிந்ததால் மரங்கள் ,புட்கள்,செடிகள்,தாவரஙகள் என அனைத்தும் செழித்து வளர்ந்தது,

அங்கு வசிக்கும் விலங்குகள்,கால் நடைகள் ,ஆடு மாடு என அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு பிடித்த தாவரங்கள்,பிடித்த உணவுகள் என அனைத்தையும் தினமும் வயிறார உண்பதும் ,ஓடி ஆடி விளையாடுவதுமாய் மிக சந்தோசமாக ஒவ்வொரு நாளும் பொழுதை கழித்து வந்தது,

ஆனால் அந்த காட்டில் வசித்து வந்த ஒரு ஆமையோ இவையாவையும் கண்டு கொள்ளாமல் தினமும் தனக்கென சிறுதுளி உணவு மட்டுமே உண்டு விட்டு மீதி இருக்கும் நேரம் முழுவதும் தன் வசிப்பிடத்தில் மண்ணை பறைத்துக் கொண்டே இருந்தது,

இதை பார்த்த மற்ற விலங்குகள் ,ஆடு,மாடு,பசக்கள் அந்த ஆமையை கேலி செய்து கொண்டே இருந்தது ,மேலும் ஆமையையும் தம்முடன் வந்து விளையாடுமாறு அழைத்தது

,ஆனால் அந்த ஆமையோ இவையாவையும் பொருட்படுத்தாமல் மண்ணை பறைத்துக் கொண்டே இருந்தது,இது தினமும் நடந்தது

மெதுவாக நாட்கள் செல்ல செல்ல கோடை காலம் ஆரம்பமானது செடி கொடி மரங்கள் எல்லாம் காய்ந்து போனது,காட்டில் வாழ்க்கை மிக கடினமானது, ஆறுகள் எல்லாம் மெதுவாக வற்றத் துவங்கியது,

அப்போது எங்கோ இருந்து காட்டுத் தீ வெகு வேகமாக பரவியது ,விலங்குகள் மற்றவையெல்லாம் எவ்வளவோ முயன்றும் காட்டுத் தீயை அனைக்க முடியவில்லை,

நெருப்பு அனைத்து உயிரினங்களையும் சூழ்ந்து கொண்டது,இனி தப்பிக்க வளியே இல்லை என்ற போது தான் ,அங்கே ஒரு பொந்து தெரிந்தது அனைத்து உயிரினங்களும் தங்களை காத்துக் கொள்ள வேக வேகமாக பொந்தினுள் ஓடியது,

உள்ளே சென்ற போது அதிசயம் அதனுள்ளே மூன்று வழிகள் ,ஒரு வழியில் கினறு போன்ற ஒன்று அதில் தண்ணீர்,மற்றொன்றில் நிறைய பழங்கள்,மற்றொன்றில் அந்த ஆமை இருந்தது,

ஆமை அங்கு வந்த அனைத்து விலங்குகள் ,உயிரினங்களை வரவேற்று இதனை நம் அனைவருக்காகவும் தான் கட்டினேன் ,கோடை காலம் முழுவதும் போதுமான தண்ணீர் ,பழங்கள் உள்ளது,மேலும் நம் அனைவரும் நெருப்பு அனையும் வரை பாதுகாப்பாக இங்கேயே தங்கிக் கொள்ளலாம் என்றது

அப்போது தான் அவைகளுக்கு புரிந்தது ஆமை ஏன் மண்ணை பறைத்தது என்று

ஆமையின் பெருந்தன்மையை எண்ணிய உயிரனங்கள் ,விலங்குகள் ஆமையிடம் மண்ணிப்பு கேட்டது,,,,,

எழுதியவர் : விக்னேஷ் (3-Jan-16, 10:49 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : aamai
பார்வை : 403

மேலே