காளையின் பகுமானம்

மீசையில்லையெனினும் நானும் தமிழ் மரபை சேர்ந்தவனே..!
வீரம் அளக்க விரிமார்புடைய காளையர்களின் வீரத்தை உரசி பார்க்க நானும் விதைத்திடேன் என் வீரத்தை திமில்களில்..
காளையர்களின் மீசைகளோடு போட்டியிடவே நானும் வளர்த்தேன் கூறிய கொம்புகளை..
தமிழ் பெண்கள் எனக்கு தோழிகளே,
எனக்கு வீரத்தை வித்திட்ட தோழிகளுக்கு தோழனை தேர்ந்தெடுப்பது என் கடமையல்லோ?!
காளையர்களே சோர்வுகள் அகல வாருங்கள் என்னுடன் விளையாட மஞ்சு விரட்டு ...,.

- கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (3-Jan-16, 12:53 pm)
பார்வை : 217

மேலே