மீண்டும் ஒருமுறை

மீண்டும் ஒருமுறை
கோபித்து கொள்
ஆர்பறிக்கும்
ஹார்மோன்கள்
அடங்கட்டும்

மீண்டும் ஒருமுறை
கண்ணீர் விடு
உயிர்பிடித்த காதல்
வேர் பிடிக்கட்டும்

மீண்டும் ஒருமுறை
கட்டி தழுவு
கண்களுக்கும்
இதயத்திற்குமான
இடைவேளி குறையட்டும்

மீண்டும் ஒருமுறை
காதல் செய்வோம்
அந்த பூங்காவில்
பூக்கள் பொறாமையில்
பொசுங்கட்டும்

எழுதியவர் : வேலு வேலு (4-Jan-16, 9:56 am)
Tanglish : meendum orumurai
பார்வை : 149

மேலே