அந்தக்கால நல்லமனிதர்

மழைக் காலங்களில்
மடக்கி விரிக்க முடியாதத்
தாழங்குடையோடு
நனையாமல் வாழ்ந்த முன்னோரின்
நெஞ்சில் ஈரம் சுரந்த காலமது

வறுமையில் வாடினாலும்
வறுமையாகக் கொள்ளாமல்
சிரமமென நினைத்தார்கள்,
வசதி படைத்தவர்கள்—கரம் நீட்டி
உதவிட்டு மகிழ்ந்த காலமது

சிறுவயது பிள்ளைகளாய்
சிறுவர், சிறுமியென பேதமின்றி
சேர்ந்து விளையாடி—நல்லவராய்
சேதமற்று இன்புற்று வாழ்ந்து
பெருமையுற்ற காலமது

தோள் சுமக்கும்வரை
தாய்ப்பாசம் தேவையென்றும்
தோளுக்கு மேல் வளர்ந்தால்
தாய்ப்பாலம் வேண்டுமென்றும்
தாயைப்போற்றிய காலமது

அயராது பாடுபட்டு
அனைவரையும் காத்து, வளர்த்து
மேன்மையுறச் செய்ததெல்லாம்
அர்த்தமில்லாமல் போனதென
கலங்கி தவிக்கும் பெற்றோர்

ஊட்டி வளர்த்த பிள்ளை
உதவாமல் போனபோது
பெற்றோரைப் பேண் என்று
ஊட்டி வளர்க்காமல் போனேனோவென
இன்று வருந்தும் முதியவர்
அந்தக்கால நல்லமனிதர்

எழுதியவர் : கோ. கணபதி (5-Jan-16, 1:11 pm)
பார்வை : 92

மேலே