சிற்பி
நிலவில் ஒளி எடுத்து,
அவள் முகம் வரைந்து.
இரவிடம் நிழல் எடுத்து,
விழிக்கு மையிட்டு.
செவ்வானம் பிரதி எடுத்து,
மேனிக்கு வண்ணமிட்டு,
பாலில் ஆடை எடுத்து,
பாவையின் பல் செய்து.
தென்னையில் பூவை போல்,
என் தேவதைக்கும் பூவைத்து
சிலை செதுக்கி பார்த்தேனடி,
அழகே,
சிறிதும் உனக்கது இனையில்லை...
உன் அன்னை போல்
வேறு நல்ல சிற்பியும் இல்லை.