அழகான மீறல்கள்

முகில் மீறிவரும் நிலவு
துகில் மீறிவரும் அழகு
அகில் மீறிவரும் வாசம்
பகை மீறிவரும் நேசம்

கரை மீறிவரும் அலைகள் -வண்ணத்
திரை மீறிவரும் கலைகள்
நரை மீறிவரும் கருமை -உயர்
வரை மீறிவரும் பசுமை

விரை மீறிவரும் மலர்கள்
மறை மீறிவரும் ஞானம்
உரை மீறிவரும் வீரம்
உவமை மீறி வரும் பொருளும்
உலகோர் போற்றி மகிழ்கின்ற அழகு

எழுதியவர் : சக்தி ச ரவிச்சந்திரன் (11-Jan-16, 5:34 pm)
பார்வை : 295

மேலே