சதைப் பசி

சதைப் பசி

ராகவனின் கைக் கார் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் பார்வைச் சாலை மீது அணிச்சையாய்ப் பதிந்து போயிருந்தது. மனம் முழுவதுவும் ராதாவுடன் சிலநிமிடங்களுக்கும் எதிர்பாராமல் வைத்துக்கொண்ட உடல் உறவின் கொண்ட உணர்வின் சிலிர்ப்பை விட்டு விலகாமல் இருந்தது .

ராகவனுக்கு இது தவறு . மிகப்பெரிய துரோகம் என்று ஒரு பக்கம் யாரோ ஒரு குரல் அதே மனசுக்குள் முக்காடிட்டுக்கொண்டு கத்திப் பிதற்றுவது போலஇருந்தது .
சில நிமிடங்களுக்கு முன் வரை இந்தக் குரல் தன் வாழ்க்கையில் எங்கு இருந்தது என்று ராகவனுக்கு ஒரு பக்கம் வியப்பாகவும் கேள்வியாகவும் இருந்தது
எல்லோரும் தவறு செய்தப் பின் இப்படி எதுவும் குரல் வருமா ?
இல்லை எனக்கு மட்டும்தான் இப்படிக் கேட்கிறதா ?
ச்சே! என்று உடலை ஒருதரம் உதறிக்கொண்டான் தன் ராகவன்

இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டதால் திருப்பூர் அவினாசிச் சாலையில் ஓரிரு வாகனங்களைத்தவிரப் போக்குவரத்து, பெரிய அளவுக்கு இல்லை .

வீட்டுக்குப் போனவுடன் மனைவி கீதா இவ்வளவு நேரமா ? என்று எப்போதும் போலக் கேட்பாள்.
ஆனால் இத்தனை நாளாய் இந்தக் கேள்விக்கு அலுப்பாய் ராகவன் பதில் சொல்லியிருக்கிறான் .சில சமயம் பொண்டாட்டியா இருந்தா இந்தக் கேள்விமட்டும்தான் கேட்ப்பியா புதுசா ஏதாவது கேளேன் என்று பதிலுக்குக் கேட்டும் இருக்கிறான் .

இன்று விசயம் வேறு!
அப்படிச் சொல்ல முடியாமாத் தெரியவில்லை .

காரைப் போர்டிகோவோவில் நிறுத்திவிட்டுக் கார்க் கதவைத் திறப்பதற்குள் முன் வாசல் விளக்குப் பளீரெனெ எரிந்தது .
கீதா இன்னும் தூங்கவில்லை.
இதுதான் மிகவும் அபாயம் .
குட்டி மகள் அகல்யாவைத் தூங்க வைத்து விட்டு அரைத்தூக்கத்தில் இருந்தாள் எப்படியாவது சமாளித்து விடலாம்.எதாவது ஒரு முட்டாள்த்தனமான நாடகத்தொடரைப் பார்த்து வைத்து விட்டுத் தூங்கவும் முடியாமல் ஒரு எரிச்சலில் அவள் இருந்தாளானால் நோண்டி நோண்டி ஏதாவது சண்டைவரும்வரை கேள்வியாய்க் கேட்டுக்கொண்டே இருப்பாள் .

ஒரு முறை இதே மாதிரி ஒரு அலுவலத்தில் புதுப் பெரிய ஆர்டர் ஓக்கே ஆனபோது அலுவலுக மேனேஜர் ஹோட்டலில் வைத்துப் பார்டிக் கொடுத்த போதுசில பேர் டிரிங்ஸ் ரகசியமாகக் கோக் டின்னுக்குள் ஊற்றி வைத்துக் குடித்து அது ஓவராகப் போய் விட்டது .இத்தனைக்கும் அலுவலக எந்தப் பார்ட்டியிலும்கட்டாயம் குடிக்கத்ததடை உண்டு.காரணம் எல்லோரும் வெகுதூரம் கார் மற்றும் டூ வீலர்ப் பயணம் போக வேண்டி இருப்பதால் .அன்று அப்படிக் குடித்தசில பேரை ராகவன் சில பேரை வீட்டுக்குக் கொண்டு போய் விடவும் வேண்டி வந்தது .
ச்சே! அப்படி ஒரு முறைக் கொண்டு போய் விடப் போனதால்தான் ராதாவுடன் இந்த உடலுறவே நேர்ந்தது என்பதுவும் ராகவனுக்குக் கூடவே தோணியது.
ஆமாம் இப்படித்தான் ராதாவின் மாமா ராஜன் என்னுடைய டீமில் ஜூனியர் வயதிலும் என்னைவிடவும் சின்னவன்தான். ஆனால் மகாக் குடியன் .அன்றும்நல்ல போதைத் தலைக்கு ஏறிய நிலையில் பின் சீட்டில் உளறிக்கொண்டே வந்தவனை இல்லை கிடந்தவனை வீட்டில் விட நேர்ந்த போதுதான் முதல்முறையாக ராதாவைப் பார்த்தான் .
அன்று ராஜன் மனைவி ஒரு விசேசத்தில் கலந்து கொள்ள வெளியூர்ச் செல்ல வெண்டிய கட்டாயத்தில் ஹாஸ்ட்டலலில் தங்கியிருந்த அவள் தங்கைராதாவைக் குழந்தைகளை ஒரு நாள் பார்த்துக்கொள்ள அழைத்து இருந்தாள் ராஜன் மனைவி
.
திருப்பூரின் நிறைய வீடுகளின் தலை விதி இதுதான் சொந்தப் பந்த விசேச நிகழ்சியெல்லாம் , ஏதாவது ஒரு ஏற்றுமதி (shipment) அவசரம் புரட்டிப்போட்டுவிடும் .மனைவியும் கணவனும் ஒரு விசேசத்தில் உள்ளூருக்குள் நடந்தால் கூடக் கலந்து கொள்ளும் சாத்தியம் குறைவு .சில சமயம் யாராவது இறந்துப்போனால்கூட ஞாயிற்றுக் கிழமையில் செத்துப் போயிருக்கலாம என்று கூட வருத்தப்பட வேண்டியதிருக்கும்

ராகவன் வீட்டில் கூட முதலில் புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டார்கள். ஒரு முறை அப்பாவும் அம்மாவும் சில வாரங்கள் வந்து தங்கியிருந்த போனபின்னர்தான் புரிந்துகொண்டார்கள்.
அன்று ராஜனை ராதாவின் உதவியுடன் ஏறக்குறையத் தூக்கிகொண்டு போய்ப் படுக்கையில் படுக்கச் செய்ய வேண்டிய நிலை.
பயத்தில் ராதா அவன் தூங்குவரை இருந்து விட்டுப் போக வேண்டிக் கொண்டதால் சில மணி நேரம் இருக்க வேண்டிய நிலை.அப்போதெல்லாம் கூடராதாமேல் மிகப்பெரிய ஈர்ப்பு வரவில்லை.
அதற்குப் பிறகு அவள் வீட்டில் அதாவது ஜூனியர் ராஜன் நடந்த குழந்தைகள் பிறந்த நாள் மற்றும் புது வீடு வாங்கிப் போனபோது கிரகப்பிரவேசம்போனது என்பதாய்ச் சில விசேசங்கள் எதிர்பாராவிதமாக ராதாவிடனுடனானச் சந்திப்பையும் ஈர்ப்பையும் அதிகரிக்கச் செய்தது .அவர்களிருவரும்அதிகம் நெருக்கமாய்ப் பேசுவதை முதலில் லேசாய்க் கவனித்த ராஜன் பிறகு ஏனோ கண்டு கொள்ளவேயில்லை
பிறகு போன் மூலம் நிறையப் பேசினார்கள்.ராதாப் புத்தகம் வாசிப்பதில் விருப்பம் உள்ளவள் ஆனால் அவள் அக்கா வீட்டுக்காரன் ராஜன் சுத்தமாகப்புத்தகம் படிப்பதைப் போர் நேர விரயம் என்றூ அலட்டிக்கொள்பவன் இதற்கு நேர்மாறாய் ராகவன் புத்தகப்புழு என்பதே இருவருக்குமான நெருக்கத்தைத்தொடங்கிவைத்தாலும் இப்படி ஒரு இன்றைய சந்திப்பின் மூலம் உடல் உறவு வரை போகும் என்று இருவரும் நினைக்கவில்லை .


கீதா கதவைத் திறந்து கொண்டே ,
என்னாச்சுங்க ரொம்ப லேட்டாச்சா சாப்பிடீங்களா ?என்றாள்
சட்டெனெ ராகவனுக்கு ஊசியை நெஞ்சுக்குள் சொருகுவது போலத் தோணியது .
அவன் ராதா வீட்டில் சாப்பிட்டப் பின்தானே ”அது” நடந்தது .
இவளுக்குத் தெரிந்து விட்டதோ ?
முதுகுத் தண்டுக்குள் சில்லெனெ ஏதோ இறங்கியது போலிருந்தது ராகவனுக்கு !
ஆனால் அது ஒரு நிமிடம்தான் .
உள்ளே ஹாலுக்குள் நுழையும்போதுதான் மனைவியின் கரிசனத்தின் காரணம் புரிந்தது .
கீதாவின் அப்பா ஊரிலிருந்து வந்து இருக்கிறார்.
சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்த அவர் வாங்க மாப்பிள்ளை என்றார் .
அவனும் வாங்க என்றான் பதிலுக்கு .அவர் அவனை உற்றுப்பார்ப்பது போல ஒரு குறுகுறுப்பு வந்தது .
அடச்சே ! என்ன இது நானே மாட்டிக்கொள்வேன் போல ?
உடையை மாற்றிகொண்டு மீண்டும் ஹாலுக்குப் போகவேண்டும் .சில நிமிடமாவது மாமாவிடம் பேசாவிட்டால் கீதா அவர் ஊருக்குப் போன பின் இதைஒரு காரணம் காட்டிக் கோவித்துக்கொள்வாள் .
ஆனால் ராகவனுக்குக் குளித்து விட்டு அவரைப் பார்த்துப் பேசலாம் என்று தோணியது .
ஆனால் இப்படி அவன் தினமும் அலுவலகம் விட்டு வந்தவுடன் குளிப்பவனில்லை மிக வெய்யிலான நாளில் மட்டுமே சில சமயம் இதைச் செய்வான் .
குளித்து விட்டுத் தலைத் துவட்டிக்கொண்டே வந்தவனைக் கீதாப் பார்த்தவுடன் என்னங்கக் குளிச்சிட்டா வரீங்க ? என்றால் கொஞ்சமும்பொருத்தமில்லாமல்.
ம் என்றான் .அவளிடம் பேசுவதில் அவனுக்கு ஒரு தயக்கம் இருந்தது .
ஏன் என்று யோசிக்கப் பயமாக இருந்தது .யோசித்தால் காரில் வரும்போது மனசுக்குள் கேட்ட ஒரு குரல் மீண்டும் வந்து விடுமோ என்று தயங்கினான்.
கீதாவின் அப்பாவிடம் சில முகாந்திரத்திற்காக ஏதேதோ பேசினான்.
மணிப் பத்தைத் தாண்டியது .இதுதான் சாக்கு என்று தூக்கம் வருவது போலக் கண்ணைக் கசக்கினான் .
அவர் நம்பிவிட்டார்.தூங்கச்சொல்லிச் சொன்னார் .கீதாவைப் பார்த்தான் .போங்க என்றாள் .
தினமும் பத்தரைக்கு மேல் தூங்கும் ராகவன் இன்று தூக்கம் வருவதாகச் சொல்வது பாசாங்கு என்று கீதா நினைத்தாலும் அப்பா வந்து இருக்கிறார்என்பதால் கண்டு கொள்ளவில்லை.

ஒரே ஓட்டம் ஓடி வந்து படுக்கையில் விழுந்தான்.
மனசுக்குள் அன்று படுக்கை வேறு ஏதோ ஒரு சுகமாகத் தோணியது .அதே படுக்கைதான் .ஆனால் உடலில் ரகசிய நரம்பெல்லாம் அன்று உற்சாகமாகம்மிகுந்த விழிப்பு நிலையில் இருப்பதாய் நினைத்தான் ராகவன் .கூடவே ஏன் எனவும் தெரிந்தது .
திருட்டுச் சுகம் கூட ஒரு பரபரப்பைத் தருகிறது மனசுக்கு என்று நினைத்தான் .
நிச்சயம் கீதாப் படுக்க வர வெகு நேரம் ஆகிவிடும் .வெகு நாளைக்குப்பிறகு அவள் அப்பா வந்து இருப்பதால் ஊர் விசயங்கள் எல்லாம் பேசி ஓய்வதற்குஎப்படியும் பணிரெண்டு ஆகி விடும் .
ஆனால் ராகவனுக்கு அது அன்று சந்தோசமாக இருந்தது .அவள் அவள் வரும் வரை தூங்காமல் ராதாவுடன் அவனுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியும்’ரீப்பிளே’ பண்ண ஆசையாக இருந்தது .
மனசும் அதுக்குக் காத்து இருந்தது போலத் துள்ளிக்குதித்து யோசிக்கத் துவங்கியது .

இன்று மனைவியுடன் ராதாவின் மாமன் ராஜன் ஒரு விசேசத்திற்கு அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு கோவைக்குப்போயிருந்தான்.மாலைத் திரும்பிவந்து விடுவதாகவும் சொல்லி ராகவன் காரை வாங்கிப் போயிருந்தான் மிகவும் தயக்கத்திற்குப் பிறகுதான் கேட்டுவாங்கிப்போனான்.மாலை ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விடுவதாகவும் உறுதித் தந்து விட்டுத்தான் காரை எடுத்துக்கொண்டு போயிருந்தான் .
ராகவனுக்கு எட்டு மணிக்கு மேல் அலுவலகத்தில் ஒரே போர் அடித்தது .ராதா ஒரு சர்வீஸ் கமிசன் புத்தகம் வாங்கச் சொல்லியிருந்தாள் அதைக்கொடுக்கவேண்டுமே என்பதும் நினைவில் வரப் போன் செய்தான் .
சும்மா ஒரு ஒப்புக்கு ராதாவிடம் அவர்கள் வந்து விட்டார்களா என்றான் .
இல்லை என்றாள் .வாங்களேன் அவர்கள் வரும் வரை பேசிக்கொண்டு இருப்போம் என்றாள் அவளாகவே .
பழம் நழுவிப் பாலில் விழுந்த உணர்வு ராகவனுக்குள் எழுந்தாலும் ராஜன் வீட்டில் இல்லாதபோது எப்படி என்று தயங்கினான்.
அதைப் புரிந்துகொண்டவள் போல ராதாவே பேசினாள்
என்ன தயக்கமா உங்களுக்கு? நாம் என்ன மாமாவிடம் கேட்டா ஒவ்வொருமுறையும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று நக்கலாய் ஒரு கேள்வியும்சிரித்துக்கொண்டே கேட்டாள் மறுமுனையில் .
இது ஆசை ஆசையாய் ஆத்துக்குள் குளிக்கப்போய்த் தயங்கிக் கரையில் நிற்பவனை யாரோ கைப் பிடித்து உள்ளே இழுத்துப்போட்டது போல இருந்தது.
இனியும் யோசிக்கூடாது என்று வாங்கி வைத்து இருந்த சர்வீஸ் கமிசன் புத்தகத்தை மறக்காமல் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டான்.

ராஜன் குழந்தைகள் இருவரும் சோபாவில் படுத்தபடியே தூங்கிப்போயிருந்தார்கள் .
ராதாச் சாப்பிடச் சொல்லி உணவு எடுத்து வைத்தாள் . அவன் மறுத்தான் .
ஒன்னும் பயப்பட வேணாம் நான் சமைக்கவில்லை அக்கா திரும்பிவர வேண்டும் என்று இரவுக்கும் சேர்த்துதான் சமைத்து வைத்து இருக்கிறாள்என்றாள் சிரித்தபடியே . ராகவனும் சிரித்துக்கொண்டான் .
சப்பாதிக்கு வித்தியாசமாக லேசாய்ச் சூடு பண்ணி வைத்த வெள்ளைப்பூண்டுக் புளிகுழம்பு ஊற்றினாள் மண மணத்தது. கீதாப் புளிக்குழம்பு எப்போதும்சுமாராகத்தான் வைப்பாள் . அடுத்த நாள் நல்லா ருசியாக இருக்கும் வைத்திரு நான் சாப்பிடுகிறேன் என்று ராகவன் சமாளித்து விடுவான் ,அதற்குள்தீர்ந்து விடும்.அதைச் சாப்பிடும் தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்வான் .
சாப்பிட்டுச் சோபாவில் உட்காரப் போனபோது குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தைகளை அவர்களைப் பெட்டில் தூக்கிச் சென்றுபடுக்கவைத்துக் கொண்டு இருந்தாள் ராதா.
ராகவன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த டிவி ரிமோட்டை எடுத்து அழுத்தினான்.வேலைச் செய்யவில்லை .டிவி ஆன் பண்ணாமல்இருந்தது. சுவிட்ச் தேடினான் கீழே இருந்தது .ஆன் பண்ணிவிட்டுத் திரும்பியவனுக்கு ஹாலுக்கு நேர் எதிரே சுமார் நூறு அடிதூரத்திலிருக்கும் இருந்தபெட்ரூமின் லேசாய்த் திறந்த கதவுத் தெரிந்த்து.அந்த மெல்லிய வெளிச்சத்தில் ராதா நைட்டிக்கு மாறிக்கொண்டு இருந்தாள் அவள் முதுகுத் தெரியத்திரும்பியிருந்தாள் .
அந்த மெல்லிய இர்வு விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் ஒளியில் ராதா அணிந்து இருந்த மினுமினுக்கும் உள்ளாடை’சாட்டின் டே பெல்ட்’ .அவள்தோளில் மினுமினுத்தது .கீழே அணிந்து உள்ளாடையுடன் அவளை அங்கிருந்துப் பார்க்கும் போது ஒரு நவீன அசையும் ஓவியம்போல ராதாத் தெரிந்தாள் .
ராகவன் ஸ்தம்பித்து விட்டான்.அவனுக்குள் இதுவரை இல்லாத இலை மறைக் காய் துணிச்சல்கள் ஊற்றாய்ப் பெருக்கெடுத்தது .கால் லேசாய்நடுங்குவது போல இருந்தது உள்ளங்கைகள் மரத்துப்போனது .இன்னும் அருகே போய்ப் பார்க்கும் துணிவு வரவழைக்க முயற்சிச் செய்தான் ஆனால் என்னசெய்வது என்று தெரியாமல் அப்படியே நின்று போனான்
அப்போது ராகவன் எதிர்பாராத ஒன்றை அவன் எண்ணம் விரைந்து நடத்தியது .
உள்ளுணர்வின் உந்துதலா அல்லது ராகவனின் உணர்வின் வெப்பம் தாக்கியதால் என்னவோ ராதாத் திரும்பிப் பார்த்தாள்
அவள் தன்னை எதிர்பார்த்தது போல இருந்தது அது ராகவனுக்கு .
ஒருகணம் அவள் கதவைச் சாத்தக் கைப் போனது .ஆனால் மனம் சாத்த மறுத்தது
இந்தத் தாமதம் ராகவனின் தயக்கதிலிருந்து விடுபட போதுமானதாக இருந்தது .சட்டெனெக் கால்கள் அந்த அறையை நோக்கிப் போனது.
பிறகு எல்லாம் நடந்துவிட்டது.

மீண்டும் உடையணிந்து கொண்டு இருந்த ராதாவிடம் மன்னிப்புக் கேட்கத் தோளில் கைவைத்தான் ராகவன் .
முகத்தைத் திருப்பிக்கொண்டு கையை எடுத்து விட்டாள் .
அந்த அறையை விட்டு அவள் ராஜனும் அவன் மனைவியும் வரும் வரை வெளியே வரவே இல்லை.
ராஜன் அவர்களுடன் ஒப்புக்குப் பேசிவிட்டு விடைபெற்றான் ராகவன் .
கடைசிவரை ராதா வெளியே வருவாள் என்ற ராகவன் நம்பிக்கை வீணானது .
கோவித்துக்கொண்டாளா ?
அப்போதே ராதா வேண்டாமென்றால் தடுத்து இருப்பாளே இப்போது மட்டும் வெளியே வர மறுக்கிறாளே ஏன் என்று மனது கேட்டாலும் அவள் சம்மதிக்காவிட்டால் எப்படி நான் தொட முடியும் ? என்று சமாதானப்படுத்திக் கிளை விட்டுக்கிளைத் தாண்டும் குரங்காய் யோசித்தது.
ஒருவேளை ராஜனிடம் சொல்லிவிடுவாளா என்ற பயமும் தொற்றிக்கொண்டது .
மிகப் பெரிய எழுத்தாளார்ச் சொன்னது போல ’ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்ணைப் படுக்கையில் வீழ்த்துவது ஜெயித்த உணர்வை ஏற்படுத்தும் என்பதாய் நினைக்கிறான் ’என்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்தது.இன்றுத் தனக்கு உண்மையாகிவிட்டது என்று உணர்ந்தான் ராகவன்.


திடுமெனெ யாரோ தோளைத் தொட்டு உலுப்புவது போல அதிர்ந்தான் ராகவன் .
பாதி விழித்தவன்,தான் யோசித்தபடியே தூங்கிப்போனதை அப்போதுதான் உணர்ந்தான்.இருந்தாலும் எழும்போது எரிச்சலாய் இருந்தது .ஒரு நல்லஉணர்வைக் கலைத்தது போலக் கோபம் வந்தது .
அவன் எதிரே கீதா நின்று இருந்தாள் ,
என்ன என்றான் எரிச்சல் மிகுந்தவனாய் .
எழுந்து வாங்கப் பக்கத்து வீட்டு மாதவன் அண்ணன் யாரையோ போட்டு அடித்துகொண்டு இருக்கிறார் போய்ப் பாருங்கக் கொன்னுகின்னுப்போட்டார்ன்னா யாருப் போலிஸ் அது இதுன்னு பதில் சொல்றது என்றாள்
ராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை . எதற்கு மாதவன் யாரையோ அடிக்கணும் ?அதிலும் அவர் சாதுவான ஆசாமி வேறு . தான் உண்டுத் தன் வேலைஉண்டு என வாழ்பவர் அதை விடத் தன் மனைவியிடம் கூடச் சத்தமாகப் பேசாதவர்.
ஒன்றும் புரியாமல் கைலியைக் கழற்றி விட்டுப் பேண்டை மாற்றிக்கொண்டு ராகவன் போவதற்குள் அந்தத் தெருவின் பல வீட்டில் வாசல் விளக்கு விழித்துகொண்டுஇருந்தது.
மாதவன் வீட்டு வாசல் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போன ராகவன் அதிர்ந்து போனான் .
அவர் காம்பவுண்ட் சுவரை ஒட்டி ஒரு மனிதன் சட்டையில்லாமல் அழுக்குத் துணியுடன் கிடந்தான்.அவன் முதுகெல்லாம் விளாறலாய்க் காயங்கள் .
அவனைச் சுற்றிச் சில தென்னை மட்டைகள் கிடந்தன அதில் மாதவன் வீட்டுப் பப்பாளி மரச் சிறு கிளைகளும் அடக்கம் .
அதற்குள் யாரோ ஒருவர் போலிசுக்குப் போன் பண்ணுங்கள் இவனையெல்லாம் அடித்தே கொள்ளணும் என்று கத்தினார்.
நான் மாதவனைத் தேடினேன் .
மாதவன் வீட்டுக்குள்ளிருந்து யாரோ என்னைக் கையசைத்து உள்ளே அழைப்பது போல இருந்தது ,
அது கேட்டக் குரலாய் இருந்தது.
கீதாவின் அப்பா .
மாப்ளே இங்க வாங்க என்றார்.
போனேன் .முன் ஹாலில் சேரில் மாதவன் உட்கார்ந்து இருக்கக் குடும்பமே அவரைச் சுற்றி நின்று கொண்டு இருந்தது .
மாதவன் மூச்சு இறைக்க இன்னும் ஏதோ அதிர்ச்சியிலிருந்து விலகாதவராய் உட்கார்ந்து இருந்தார் .
அங்கு இருந்த ராகவன் மாமனார்தான் பேசினார் .
அந்த ஆள் திடுடன் மாதிரியும் தெரியவில்லை பின் வாசல் பூட்டாமல் இருந்திருக்கிறது வழியே உள்ளே வந்து இருக்கிறான். அவர் பெண் தனியே இருந்த பெட் ரூமுக்குள் நுழைந்து ஏதோ பண்ணியிருக்கிறான் அது விழித்துக்கொண்டு கத்தியிருக்கிறது அதற்குள் மாதவன் போய் அடித்து வெளியே இழுத்துப் போட்டு இருக்கிறர் என்றார் .
அதற்குள் போலிஸ் வந்து விட்டதாக யாரோ மாதவனை வெளியே கூப்பிட்டார்கள் .
இரண்டு போலிஸ் வந்து இருந்தார்கள் .ஒருவர் ஏட்டு .கீழே கிடந்த அந்த ஆளைத் தூக்கி நிறுத்தினார்கள் .தலையில் ஒரு வாளித் தண்ணீர் ஊற்றினார்கள்.அந்த மனிதனை அப்போதுதான் மிக நெருக்கத்தின் ராகவன் பார்த்தான் .அவன் கூட்டத்தில் எல்லோரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே எழுந்துநின்றான் .ராகவனைப் பார்த்தும் சிரித்தான் .பசிக்குது என்று வயிற்றையும் அதற்குக் கீழும் கையை இறக்கித் தடவிக் காண்பித்தான் .
அடிச்சு இழுத்திட்டுப் போங்க சார் என்றார் முதலில் போலிசைக் கூப்பிடச் சொல்லிக் குரல் கொடுத்தவர் மீண்டும் கத்தினார்.
அப்படிச் சொன்னவர் குரலில் ஒரு பயம் இருந்தது
போலிஸ் மாதவனைப் பார்த்து, இப்படியா அடிப்பீங்கச் செத்துகித்துப் போயிருந்தா யார் பதில் சொல்றது ?
காலைல வந்து ஸ்டேசன்ல ஒரு கம்ளைண்டுக் கொடுக்கணும் என்று அந்த மனிதனைத் தள்ளிக்கொண்டு போனார்
அவர்கள் வரும்போதே ஒரு ஆட்டோ கூட்டி வந்து இருக்கிறார்கள் .
அதில் தள்ளி உட்காரவைத்த போலிஸ்க்காரர் முன்னால் ஆட்டோ டிரைவரை நகர்த்தி உட்காரச் சொல்லி உட்கார்ந்து கொண்டார்
ஆட்டோவின் பின் சீட்டில் உட்கார்ந்து இருந்த அந்த ஆள் ராகவனையே பார்த்துக்கொண்டு இருந்தான் .
ராகவனுக்கு அது என்னவோ செய்தது !

ஒரு வழியாய் எல்லோரையும் அனுப்பிவிட்டு,மாதவனைத் தூங்கச் செல்லவைத்து விட்டு வீட்டுக்கு வந்து படுத்த போது இரண்டு மணியாகிவிட்டது.
கண்ணை மூடிய ராகவனுக்கு அந்த அடிபட்ட ஆள் முகம் சிரித்தபடிப் பல முறை வந்தது .தூக்கம் வரவேயில்லை
எப்படியோ தூங்கிப்போன ராகவனை யாரோ தென்னை மட்டையில் அடிக்க ஓட ஓடத் தாக்குவதற்குத் துரத்தினார்கள் .ஓடிக்கொண்டே திரும்பி யார் துரத்துகிறார்கள் என்றூ முகத்தை அடையாளம் பார்த்தப் போது அது மாதவன் முகம் மாதிரியும் ,அவன் மாமா முகம் மாதிரியும் தெரிந்தாலும் அடிங்கள் கொல்லுங்கள் என்ற குரல் மட்டும் அவன் மனைவி கீதாவின் குரலாய் இருந்தது .ஓடிக்கொண்டு இருந்த ராகவன் யார்மீதோ முட்டி விழுந்தான்
மோதிய ஆளை நிமிர்ந்து பார்த்தான் மாதவன் வீட்டில் அடிவாங்கிய அந்த ஆள் சிரித்த படி நின்று இருந்தான் . வயிற்றையும் அதற்குக் கீழேயும் தடவி பசிக்குது என்றான் .அதற்குள் கீழே கிடந்த ராகவனை யாரொவெல்லாம் அடிக்க அந்த ஆள் சிரித்தபடியே நின்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ராகவன் உடல் முழுதும் அடி விழுக விழுக வலிதாங்காமல் கத்தியபடியே திடுக்கிட்டு எழுந்தான் .
எதிரே இருந்த ’டிஜிட்டல் க்ளாக்’ நான்கு மணி எனக்காட்டியது .
தண்ணீர்க் குடித்து விட்டு மீண்டும் படுத்தான் .

காலையில் சாப்பிட உட்கார்ந்த போது இட்லியை வைத்துக்கொண்டே ,என்ன ராத்ரி உங்களுக்குக் கெட்ட கனவா ? புலம்பிகொண்டே இருந்தீங்க என்று கீதாக் கேட்டாள்.
ராகவனுக்கு நேற்று முழுநாளுமே கெட்ட கனவாகத் தோணியது .
பதில் சொல்லவில்லை.

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (12-Jan-16, 11:58 am)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 172

மேலே