இன்றும் நீ சொல்லவில்லையடா

எத்தனையாண்டுகள் ஆகிவிட்டது !

இன்றும் அவனை உற்றுப்பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.இன்னமும் அவன் மாறவில்லை அதே சிடுமூஞ்சி ,அதே கொஞ்சும் சிரிப்பு ,அதே குழந்தை அழகும் ..... அவனைப் பார்க்க ஏன் எனதுவிழிகள் தேடுகின்றதென்றது என்று இதுவரையும் உள்ளம் கண்டுபிடிக்க முயற்சித்ததும் இல்லை .இருந்தாலும் அவனையே தேடுகிறது .அவனைப் பார்க்கும் போதெல்லாம் நினைவில் வருவது

"காலம் முழுதும் உன்னோடும் உன் அருகிலும்
உன் இன்ப துன்ப நிழலிலே வாழவேண்டும் " என்பதுதான் ...
இன்றும் நான் நினைக்கும் தருணங்களில் ,நீ எனக்குத் தந்த உன் அழகிய நினைவுகள் என் உயிரைவிட உயர்ந்ததுடா ...

அன்றொருநாள் என் தோழி சொன்னது என் நினைவில் வருகின்றது .ஆண்கள்தான் பெண்கள் பின்னால் வருவார்கள் நீயேண்டி அவனுக்கு பின்னாலே லூசுமாதிரித் திரிகிறாய் ....அவனும் அவன் நடையும் ஆளையும் பாரன் .....உன்னத் திருத்த முடியாது நீ என்னாவது செய்து துல ...அவளுக்கு அன்று புரியவில்லை காதல் அவன் அழகைப்பார்த்து வருவதில்லை அன்பான மனசைப் பார்த்துதான் வருவதுஎன்று ....இன்று அவளே ஒருவனை உருகி உருகி காதலித்து கரம் பிடித்துவிட்டால் ...இன்றும் இதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது ....
ஆண்களின் முதற்காதல் எவ்வளவு தூய்மையானதோ அதே அளவு பெண்ணின் முதற்காதல் பரிசுத்தமானது ... ...

நான் இன்றும் அவன் பின்னாலே அலைகிறேன் ......அவன் எப்பொழுதாவது என்னைப்பார்த்து இது உங்கட பேனாவா என்று கேட்பானா என்பதற்காகவே அவன் நடந்துவரும் பாதையில் அவன் காணும் படியாக எத்தனைப் பொருட்கள் கீழே விழுத்திருப்பேன்...அவன் மட்டும் நான் கீழே விழுத்திய பொருட்களை கண்டு இருப்பான் ஆயின் அவன் காலடியில் விழுந்த என் இதயத்தையும்எடுத்திருப்பான்..அவனைபார்ப்பதற்க்காகவே
காரணம் தேடி பம்பரம் போல் முன்னும் பின்னும் அலைந்திருப்பேன்...இன்று இதையெல்லாம் நினைக்கும் பொழுதுகள் வெகுளித்தனமாக இருக்கின்றது ...

இப்பொழுதும் என் முன்னால்தான் நிற்கின்றாய் .இப்ப கூட சொல்லவில்லையடா நீ நன்றாக நடிப்பாய் என்று ,உன்னை நான் பார்த்த நிமிடங்கள் எல்லாம் நீயும் புளுகில் சிரித்துக் கொண்டு திரும்பினாய் என்பதை இன்றும் நீ சொல்லவில்லையடா ......உன் நடிப்புக்கு எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறேன் ..என்ற கோபத்தில் எழுந்து அவன் அருகில் சென்றேன் ..அவனைப்பார்த்து ,

நான் உன் பின்னே உனக்காகவும் உன் காதலுக்காக தவித்தது கூட உனக்கு தெரியாதா இல்லை தெரிந்தும் தெரியாது போல நடிக்கிறாயா? என்ற கேட்டவுடனே அவன் ஒன்றும் பேசவில்லை ...அவனும் கோபத்துடன்
"இன்று நீ இவ்வாறு கேட்கிறாயே
அன்று கேட்டு இருக்கலாமே " இப்ப மட்டும் உனக்கு எப்படி தைரியம் வந்தது என்றான் ....
உதட்டில் புன்னைகையை மறைத்துக் கொண்டு
இன்று நீ என் அன்பு கணவனடா ....என்று சொல்லி விட்டேன் .....
ஐந்து நிமிடம் மெளனங்கள் மட்டும் தான் வேறொன்றும் இல்லை ......................................................................................
கட்டி அணைத்துக் கொண்டேன் விழிகள் நனைந்த கண்ணீருடன் ....

எழுதியவர் : ஜெபகீர்த்தனா (12-Jan-16, 9:12 pm)
பார்வை : 90

மேலே