உதிர்ந்து போனாள்

என் வானின் நிலவு அவள் காணவில்லையே
என்னோடு சேர்ந்து வாழ கூடவில்லையே
கல்லாகி போச்சே எந்தன் தேகம் - அவள்
கல்லறையின் மேலே வாழ்க்கைதோரும்

சாவு கூட நம்மை பிரித்தலாகதென்று
சாகும் முன் வரையிலும் சாமியிடம் கேட்டாள்
சுயநலமாய் அவள் மட்டும் சமாதியானாள் - என்
சுயம் மறந்து நானும் சுற்றுகின்றேன்

என் உயிரே என்னை பிரிந்தது - இருந்தும்
இதயம் மட்டும் இன்னும் துடிக்குது - அந்த
மரணம் கூட என்னை வெறுக்குது
தவணை முறையில் தனிமை என்னை கொல்லுது

வெளியில் தெரிந்த தண்டினை
வெட்டி எறிந்தாய் எமனே - அவள்
மரித்து போனாள் என்று நீ
மார்தட்டி கொள்ளாதே - என்
மனதின் ஆழம் புகுந்திட்ட
நினைவு வேரவள் - என்
ஆத்ம சோதி எரிந்திட
எரியும் திரியாய் அவள் நினைவுகள்

காலனே அதையும் கவர்ந்திட கங்கனமோ
கவலை வேண்டாம் கால தாமதமும் வேண்டாம்
கயிற்றை என் மேலேயும் வீசிவிடு

என் வாழ்க்கை என்னும் பூங்காவில்
பூத்த ஒற்றை பூ அவள்
உதிர்ந்து போனாள் முறிந்து போனேன் - என்
பூவில்லாத பூங்காவும் எனக்கெதற்கு
மரணமே உன்னிடும் விற்றுவிடுகிறேன்
வாங்கிக்கொள்(ல்).....

ஆழமான காதல் கடலில்
என் சிப்பி மனதில்
முத்தாய் அவள் இருந்தாள்
மரணத்தை அலங்கரிக்க
மாலையாகி போனாள்
ஆழமான காதல் கடலில்
மூழ்கி மூர்ச்சையாக பார்க்கிறேன்
மனமற்ற மரணத்திற்கு
முத்துமாலை மட்டும் வேண்டுமாம்
சிப்பிமாலை வேண்டாமாம்.......

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (14-Jan-16, 1:43 am)
பார்வை : 127

மேலே