அழகாய் இருக்கிறாய் பயமாகத்தான் இருக்குதடி
அமுதுண்டாயோ நீ
என்னுள் அமரத்துவமாய் என்றும் வாழ்பவளே ...
பொங்கி வரும் கடலினும் மிஞ்சியே
என்னுள் உன் நினைவு பொங்குதடி...
அஞ்சித் தான் இருக்கிறேனடி
உன்னை கண்டதும் காதல்
வயப்பட்டது நான் மட்டும் தானா என்று ...?
நீ வரும் போது மட்டும் சாலையில் வேறு ஆண்கள்
இருக்கக் கூடாதென நெஞ்சம் வேண்டுதடி ...