பொங்காத பானை

பொங்கல் பானை நானடி
நீ பார்க்காது போனால் நான்
பொங்காத பானை ஆகிடுவேன் நில்லடி...

அறுவடைக்கு தயாரான கரும்பைப் போல்
ஆரவாரம் கொண்டு இருந்தேனே
நீ என்னை பார்க்காததால்
விலை போகாத கரும்பாக
வீதியிலேயே கிடக்கிறேனடி ...

நீ சுவைத்த வெண்பொங்கல் கூட
இப்போது சர்க்கரைப் பொங்கலை
போல் இனிக்குதடி...

படையலுக்கு தயாராகி காத்திருக்கிறேனடி
என்னை....
உண்ண இன்னும் என்ன தயக்கமடி...

மார்கழி கழிந்து தை பிறந்தாச்சடி
உன் கோபம் கழிந்து எப்போது
என்னை மன்னிப்பாய் சொல்லடி...?!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (15-Jan-16, 8:39 pm)
பார்வை : 108

மேலே