எம் பையம் பேரு பத்மாஷ்

யோவ் என்னய்யா உம் பையனுக்கு பத்மாஷ் -ன்னு பேரு வச்சிருக்க?

ஆமாங்க. எம் பையம் பேரு பத்மாஷ் -தாங்க.

எதுக்கய்யா அந்தப் பேர வச்ச?

நா அவனுக்கு பரம்சிவன் -ன்னு பேரு வைக்கலாம்னு இருந்தங்க. எங்க சொந்த பந்தமெல்லாம் பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேர வைக்கிறது இந்தக் கால தமிழர் பண்பாடு இல்லன்னு சொன்னாங்க. இந்திப் பேர வைக்கிறது தான் நாகரிகம்னு சொன்னாங்க. அது தான் அவனுக்கு பத்மாஷ் -ங்கற இந்திப் பேர வச்சுட்டேனுங்க.

அந்தப் பேர உனக்குச் சொன்னது யாரய்யா?

நா டிவி பாத்துட்டு இருந்தேனுங்க. ஒரு இந்திப் படம் ஓடிட்டு இருந்துச்சுங்க. அதுலே ஒரு பொம்பள ஒரு வாலிபப் பையனப் பாத்து “பத்மாஷ், பத்மாஷ்”ன்னு சொல்லுங்க.அது நல்ல பேரா இருக்குதேன்னு அந்தப் பேரையே எம் பையனுக்கு வச்சிட்டேனுங்க.

யோவ், இந்திலே பத்மாஷ் -ன்னா அயோக்கியன் -ன்னு அர்த்தம் அய்யா.

அது எந்த அர்த்தமோ இருந்துட்டு போகட்டுங்க. எல்லாம் அர்த்தம் தெரிஞ்சா பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறாங்க. தமிழ் நாட்டில் 99% பேர் தங்களோட பிள்ளைங்களுக்கு இந்திப் பேரத் தான் வைக்கறாங்க. அவுங்கள்லெ 0.5% பேருக்குக் கூட அவுங்க பிள்ளைங்களுக்கு வச்சிருக்கற இந்திப் பேருக்கு அர்த்தம் தெரியாதுங்க. அப்பிடி இருக்கையிலெ எம் பையனோட பேருக்கான அர்த்தம் பத்தி நீங்க எதுக்குங்க கவலைப்படறீங்க. போங்கய்யா, உங்க வேலையப் பாத்துட்டு.
------------------
நன்றி: Wiktionary
Hindi बदमाश ‎(badmāś).
budmash

badmash ‎(plural badmashes)

(India) A rogue, ruffian, bad person, criminal, naughty one.

எழுதியவர் : மலர் (15-Jan-16, 11:00 pm)
பார்வை : 147

மேலே