வாசல் வரை வந்தவளே
வாசல் வரை வந்தவளே !
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவளே
வசந்தம் நீ வந்த பின்பு தான்
என் வீட்டிற்கு வந்தது
வறண்ட என் நெஞ்சத்திலும்
கவிதைகள் ஊற்றெடுத்து
வாழ்வியலின் உண்மையை சொன்னது
ஏழ்மை என்னை அரித்து கொண்டிருந்தபோது
செழிப்பை வாரி இறைத்தபடி வந்தது
உன் ஒரு பார்வை
போதுமடி என் வாழ்வு நிறைவடைய
போதும் அந்த ஒரு பார்வை
அந்த வினாடி முதல் இந்த உலகின் முதற்குடி மகன்
என்னை சுற்றி வாசகர் கூடம்
என் தலையை சுற்றி பிரகாசமான ஒளிவட்டம்
நானும் ஓர் கவிஞன் ஆனேன் ஆம்
இப்போது நானும் ஓர் கவிஞன்