நிதானம் வேண்டும் சாலையிலே

அதிவேகம் விபத்துக்கு வழிவகுக்கும்
------அவசரப் படாமல் வண்டிஓட்டு
ஆபத்து ஏற்படும் அதைஉணர்ந்து
------அளவான வேகத்தில் வண்டிஓட்டு

இயல்பான வேகத்தில் ஓட்டிச்சென்றால்
------இடரெதும் உனைவந்து அண்டாது
ஈனஉடல் விபத்தினில் நேராது
------இன்னுயிரின் இழப்பும் இருக்காது

உரிமமும் வாங்கிடு வண்டிஓட்ட
------உள்ளபடி காவலர்க்கு எடுத்துக்காட்ட
ஊர்தியினை ஓரத்தில் நிறுத்திவிட்டு
------உறவுடன் செல்போனில் பேசிடுநீ

எங்கேநீ சென்றாலும் தலைகவசம்
------ஏற்றவகை கண்டு அணிந்திடுவாய்
ஏறியதும் பேருந்தின் உள்ளேசெல்வாய்
------எப்போதும் படிநிற்றல் தவிர்த்திடுவாய்

ஐயமின்றி சாலையின் விதியறிவாய்
------அனைத்தையும் மனதினில் பதித்திடுவாய்
ஒப்பற்ற உயிரினை நீஇழந்தால்
------ஒப்பாரி வைக்கும் உன்உறவுகளே

ஓம்பிடுக உடலொடு ஊர்தியினை
------ஒத்துக்கொள்ளு நான்சொல்லும் சேதியினை
ஔடதமாம் நிதானம் சாலையிலே
------அஃதே தரும்சுகம் வாழ்வினிலே.

எழுதியவர்
பாவலர்.பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (18-Jan-16, 9:07 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 91

மேலே