கருத்துகள்
முதுகு வளைந்த முதியவர்
ஆயிரம் எண்ணங்கள் முகத்தில்
காண வினவினான் ஒருவன்
மற்றொருவனிடம் என்ன காண்கிறாய்
இவரிடம் என்று எளிதாக?
சாக வேண்டிய வயதில்
வாழ நினைக்கும் ஆசை
என்றான் ஏளனமாய்.
வினவிவனோ எடுத்துரைத்தான்
பவ்யமாக தன் கருத்தை
வாழ முடியா சூழலிலும்
வாழ முடியுமென்ற நம்பிக்கை.
முதியவர் கருத்து மாறுபடலாம் முற்றிலும்
இவர்கள் கருத்திலிருந்து.
காணும் வகையில் கருத்து
கருத்துக்கு உரித்த வார்த்தைகள்.
அடிப்படை எண்ணம் ஒருவனை
எடுத்து உரைக்கிறது அழகாக.
பயத்தை பாதுகாப்பு உணர்வாக
பாதுகாப்பு உணர்வை பயமாக.
ஆசையை இலட்சிய படியாக
இலட்சிய படியை ஆசையாக.
தேவையின் இலக்கணம் மாறுபடும்
ஒவ்வொரு மனித மனத்திற்கும்
கருத்தும் மாறுபடும் அத்துடன்.
- செல்வா

