உன் நினைவில் என் சுகம்

நிலவையும்
பகலையும் ஒன்றாய் காணாதவன்

உன் விழியினில் ஒன்றாய்க் கண்டேன்

நினைவையும் கனவையும் ஒன்றாய் காணாதவன்

உன் அன்பினில் அதனைக் கண்டேன்

நிழல் மிதக்கும் உனதழகை என் இதயம் திறந்து படர்த்திக் கொண்டேன்

உன் மீது காதல் மோகம் வளர்த்துக் கொண்டேன்

தானாக தரையில் மிதக்கிறேன் உன்னை நினைத்து என்னை மறந்து மிதக்கிறேன் தானாக .

படைப்பு:-
RAVISRM

எழுதியவர் : ரவி . சு (20-Jan-16, 9:13 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 251

மேலே