அய்யோ, எம் பொண்ணு பேரு கொத்தமல்லி செல்வமா

அய்யோ, எம் பொண்ணு பேரு கொத்த்தமல்லி செல்வமா?
-------------------------------------------------------------------------------------
உங்க பெண் கொழந்தைக்குப் பேரு வைக்கணும்ன்னு சொல்லிட்டிருந்தீங்களே…
----
ம். சிறப்பா பெயர் சூட்டும் விழா நடத்தி அவுளுகுப் பேரு வச்சாச்சாங்க.
---
அப்பிடியா. நல்லதுங்க;. நா வெளியூர் போய்ட்டேன். உங்க வீட்டுக்கு வந்து கொழந்தைய நேர்ல வாழ்த்த முடியல. சரி, என்ன பேரு வச்சீங்க.
==
தானியாஸ்ரீ –ன்னு அழகான பேரா வச்சமுங்கோ. எல்லாம் பேரு நல்லா இருக்குன்னு சொன்னாங்க.
----
சரி. அதுக்கு என்ன அர்த்தமுங்க?
==
அதெல்லாம் யாருக்குத் தெரியுமுங்கோ. எல்லாம் இந்தி பேரத்தானே அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. அந்த தற்காலத் தமிழர் பண்பாட்டுப்படி எம் பொண்ணுக்கு தானியாஸ்ரீ –ன்னு பேரு வச்சோமுங்கோ.
----
இருந்தாலும் அர்த்தம் தெரிஞ்ச பேரா வச்சிருக்கலாமே.
=
சரிங்க. தானியாஸ்ரீ –ங்கறதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்குத் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லறீங்களா?
-
அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு. தானியா –ன்னா கொத்தமல்லி. அத தனியா –ன்னும் சொல்லறாங்க. அது ’பெண்பால் கடவுள்’ என்ற அர்த்தத்தையும் தரும் சொல். ஸ்ரீ –ங்கறது நாம தமிழ்ல சொல்லற ‘திரு’ ‘திருமிகு’ என்ற சொற்களுக்கு இணையானது. ஸ்ரீ –ங்கற சொல் ‘புனிதமான’ என்ற அர்த்தத்திலேயும் பயன்படுத்தறாங்க. நாம திருக்கோயில்னு தானே சொல்லறோம். ஸ்ரீ-ங்கறது செல்வத்தையும் குறிக்கும். அதனால தான் நல்ல செல்வாக்கோடு இருக்கணும்னு வர்த்தகம் பண்ணறவங்கெல்லாம் அவுங்க கடை, தொழில்கூடம், தொழிற்சாலை, வாகனங்கள், மற்றும் வீட்டுப் பேருங்களுக்கு முன்னாடி ஸ்ரீ –ங்கற வடமொழிச் சொல்லைப் பயன்படுத்தறாங்க. உதாரணமா; ஸ்ரீகணேஷ் இண்டஸ்ட்ரீஸ். போதுங்களா?
-
அய்யோ, அப்ப எம் பொண்ணுப் பேரு கொத்தமல்லி செல்வமா?
-
அதுவும் அந்தப் பேருக்கான ஒரு அர்த்தம். மற்ற அர்த்தங்களும் இருக்குதங்களே. நீங்க அந்த அர்த்தத்த எடுத்துக்காம நல்ல அர்த்தங்கள மட்டும் எடுத்துக்குங்க.

--====----
===நன்றி: கூகுல்/விக்ஸ்னெரி, விக்கிப்பீடீயா

धनिया {dhaniya} = CORIANDER, Goddess name
Shri (Devanagari: श्री, IAST; Śrī), also transliterated as Sree, Shri, Sri, Shree, Si or Seri is a word of Sanskrit origin, used in the Indian subcontinent as a polite form of address equivalent to the English "Mr." or "Ms." in written and spoken language, or as a title of veneration for deities (usually translated as "Holy").
==============

எழுதியவர் : மலர் (20-Jan-16, 5:25 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 185

மேலே