தேடல் - உதயா

ஒவ்வொருவருக்குள்ளும்
எதோ ஒரு இலக்கு
தேடலின் துவக்கத்திற்கு
துவக்கமாக இருந்துவிடுகிறது.

சிலரின் தேடல்
கிராமப்புற
அரசு பேருந்தாகவே
இருந்துவிடுகிறது.

இன்னும் சிலரின் தேடல்
குடிபோதைக்காரின்
லாரியாக இருந்து
இறந்துவிடுகிறது.

ஒரு சிலரின்
தேடல் மட்டும்
விமானமாக இருந்தும்
களவுப்போகும் விமானமாகிறது.

இருப்பினும்
இங்கு தேடல் என்பது
ஒரு தேடலாகவே
இருந்துவிடுகிறது.

எந்த ஒரு தேடலும்
முதல் இரு படிகளை விட்டு
மூன்றாவது படியிலிருந்து
தொடர நினைத்தே தொடருகிறது.

நான் என்பதும்
நீ என்பதும் தேடலின்
முதல் இருபடிகள்
என்பதை

தேடல் மறைத்திருக்கும்
இல்லையெனில்
தேடல்காரன்
மறந்திருப்பான்.

தேடல் வெறும்
இலைகளாக இன்றி
விழுதுகளாக
மாறும் சமயத்தில்

அந்த தேடலும்
யாரோ சில
தேடல்காரனுக்கு
தேடலாக அமைந்துவிடுகிறது.

இங்கு நானோ
தேடலில் பைத்தியக்காரன்
என் தேடல் முதல் படிக்கும்
முன்னிருந்து தொடங்கியிருக்க கூடும்.

எழுதியவர் : உதயா (21-Jan-16, 6:33 pm)
பார்வை : 171

மேலே