எங்கள் ஊர் நூலகம்
கட்டுக்கட்டா புத்தகம் இருக்கு
எடுத்து வைக்க இடமில்ல…
அடுக்கடுக்கா அடுக்கி இருக்கு
எடுத்துப் பாக்க இடமில்ல…
விரித்துப் படிக்க இடமிருக்கு
எடுக்க போனா இடமில்ல…
அடுக்குச் சட்டம் நடுவுல தா
நாம் போனா நசுங்குவோமே…
அறிவ கூட்டும் புத்தகத்தை
அடக்கி வச்சு என்னபயன்…
மரிச்சுப் போது அதுகதான்
அரிச்சுப் போற கரையானால…
குடிய கெடுக்கும் மதுபானம்
கட அமைக்க இடந்தானம்…
நூலகத்த விரிவாக்க இடமிருந்தும்
விடியலயே, வீண்பேச்சு பேசிப்புட்டு…
வெளயாட்டா வாக்குறுதி தா
கொடுத்துப்போகும் மானங்கெட்ட மகராசா…
ஓட்டுப்போட காத்து
நின்னோம்
ஒய்யாரம நீங்க ஒக்காந்துபோக…
கட்டிக் கொடுங்க ராசா
நீங்க இருப்பிங்க பேசா...