கைவாகு

சுவை சொட்டும்
பாசப்பகிர்வில்

பங்கிட்டு உண்டதில்
பறிமாறிடுகையில்

அன்பை அடையாளங்கண்டு
அன்னமிட்டதில்

கைவாகு
நுகரப்பட்டது,

கரிசனம்
உணரப்பட்டது..

மகள்
சுட்ட தோசையில்
அம்மாவின்
சுவை கலந்திருந்தது!

எழுதியவர் : செல்வமணி (24-Jan-16, 7:44 pm)
பார்வை : 140

சிறந்த கவிதைகள்

மேலே