பசியினிலே

வாசம்செய்ய வீடில்லை,
தேசபக்தி எப்படித்
தெரியும் அவனுக்கு..

துண்டு நிலமில்லாதவனுக்கு
மண்டையில் ஏறாது
மண்ணின் மாண்பெல்லாம்..

பசித்தவன் முன்
பகவத்கீதை கூட,
வெறும்
பைண்ட்பண்ணிய புத்தகம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jan-16, 7:24 am)
பார்வை : 56

மேலே