ஓடை நீர்

ஓடும் நாட்களுடன் ஓடும்
ஓடையின் நீர்ப்போல என்வாழ்வும்
மாறும் தடங்களுடன் மாறும்
ஓடையின் நீர்ப்போல என்னெண்ணமும்
தேடும் பாதைகளுடன் தேடும்
ஓடையின் நீர்ப்போல என்நோக்கமும்
மீறும் வேகத்துடன் மீறும்
ஓடையின் நீர்ப்போல என்செயல்களும்
சேரும் தன்மைகளுடன் சேரும்
ஓடையின் நீர்ப்போல என்குணங்களும்
கடக்கும் பலகற்கள் கடக்கும்
ஓடையின் நீர்ப்போல எந்தன்மைகளும்
திரும்பா ஓடையின் நீர்ப்போல
என்வாழ்வும் என்மனமும் நாளும்
மாறும் என்றும் மாறும்
நல்லப் பாதையைத் தேடும்

- செல்வா

எழுதியவர் : செல்வா (26-Jan-16, 8:47 am)
பார்வை : 1627

மேலே