தேனீர்க் கடை
மார்கழி மாதப் பனி;
குளிருக்கு இதமாய்
இருட்டுக்குள் ஒடுங்கிக் கொண்ட
சூரியன் !
போர்வைக்கு உள்ளே
நடுங்கும் உடலோடு
நடுத்தர வயது நாயகன் !
கூரையின் விளிம்பில்
குண்டு குண்டாய் பனித்துளி !
எங்கோ கேட்க்கும்
நாயின் ஊளை சத்தம்!
தூக்கத்தை கலைத்து
தேனீர்க் கடையை திறந்துவிட்டு ;
பாத்திரத்தில் பாலை ஊற்றி;
பம்பு ஸ்டவ்வை பத்தவைக்க
அடித்த சத்தத்தில்
சூரியனும் விழித்திடுமே !
சுண்டகாய்ச்சிய பால்மனத்தில்
சுவைத்து குடிக்கும்
டீ வேண்டி;
தூக்கம் கலைத்து வந்ததுவும்;
சுகமான அனுபவமே !
திரும்பி வரா நாட்களுமே
விழித்திரையில் காட்சியாக !

