பெண்ணினம் வளரட்டும்

பெண்ணினம் வளரட்டும்

பரம்பொருள் விரிவொளி பரவட்டும்
அறவழி ஆன்றோர் சிறக்கட்டும்

பார் மகள் பாரினில் பகுதறியட்டும்
அழகுலத்தில் வாழ்ந்து ஆர்பரிக்கட்டும்

வீரமுள்ள வேங்கைகளாகட்டும்
வெறியர்களை விளந்தரியட்டும்

கூரிய புத்தியும் கொண்டதாகட்டும்
புவி மகள் பொலிவுரட்டும்

புரட்சி புதுமை புகழ் பெறட்டும்
தன்னை சரிதம் திறன் பெறட்டும்

அல்லும் பகலும் வல்லவை செய்து
அரியணை அப்பாற் செல்லட்டும்

தக்க துணை உடன் பெறட்டும்
பக்குவபட்ட பயன் தரட்டும்

வறுமை நீக்கிட பொறுமை பெறட்டும்
நேரிய கொள்கை நிலை நாட்டட்டும்

அருந்திறன் அனுதினம் பெறட்டும்
அறமுறை அறிந்து அகிலம் சிறக்கட்டும்

பெருமைக்குரிய பெண்ணினம் வாழட்டும்
மாதற்குரிய மகிமை மண்ணில் வளரட்டும்

- நெல்லை பாரதி
எழுதியவர் : NELLAI BHARATHI (14-Jun-11, 12:42 pm)
பார்வை : 266

மேலே