இமயம் தொலைகிறது
உனக்காக
நான் சிந்தும் ஒவ்வொரு
துளி கண்ணீரும் - காதலில்
நான் தோற்று விடுவேன்,
என்பதற்காக அல்ல !
காதல் எப்போதும் தோற்பதில்லை,
'காதல்' அதன் வேலையினை
சரியாகத்தான் செய்கிறது - பாவம்
காதலர்கள் தான் சில நேரம்
நிலை 'சரிய' தொடங்குகிறார்கள்....
இமயம கூட
சரிந்துவிடும் உன் ' இதழ்' சொல்லிவிட்டால்
ஆனால்
சரிந்த இமயமும் 'தொலைந்துவிடும்'
நீ நிலை மாரி சரிந்துவிட்டால்......
இப்பொழுது
நான் சரிந்த இமயம் ( உனக்காக)
நீ என்னை தொலைத்து விடாதே!
அதற்காகத்தான் இந்த 'கண்ணீர் துளிகள்'.............அன்பே
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

