அப்பா
எங்கு சென்றாலும்
எந்த வேலை செய்தாலும்
என்னுடன் இருப்பது
தாங்கள் அல்லவா....!
மனம் எனும் கடலில்
எண்ண அலைகள் உண்டாக்கும்
துன்பம் தான் கொடுமை....!
என்னுடன்
பலர் இருக்கின்றனர்
இருப்பினும்
எவரும் இல்லாத காட்டில்
தனித்து விட்டது போல்
உணர்கிறேன்....!
உங்கள் கையை பிடித்து
வெகு துரம் சென்ற காலம் போய்
உங்கள் நினைவை
நான் இறக்கும் வரை
நெஞ்சில் சுமக்கும்
காலம் வந்து விட்டதே....
தந்தையாய் அல்லாமல்
ஒரு நண்பன் போல்
உறுதுணையாக இருந்து
என்னுடன்
எல்லாவற்றையும்
பகிர்ந்து கொண்ட தாங்கள்
என்னிடம் சொல்லாமல்
திடீரென்று
என்னை விட்டு பிரிந்தது ஏனோ...?
இது தான் காலத்தின்
கொடுமையோ.....?
- (எனது தந்தைக்கு சமர்ப்பணம்)