காதலைக் கூறாமல் தவிக்கிறேன்

மென்பொருள் பல பெருகிவிட்ட சூழலிலும்
என் அகப்பொருளைக் கூறாது தவிக்கிறேன் கண்மணியே

வன்பொருள் பற்பல இயங்குதளத்தில் கிடைக்கின்ற சூழலிலும்
என் இயங்குதளம் நீயின்றி தவிக்கிறேன் கண்மணியே

நூறு கோடி பேர் வாட்ஸ்அப்பில் உலாவரும் சூழலிலும்
என் தகவலை உனக்க னுப்பயிலாது தவிக்கிறேன் கண்மணியே

முகநூலில் முழு உலகும் வந்துவிட்ட சூழலிலும்
என் உலகம் உனைக் காணமுடியாது தவிக்கிறேன் கண்மணியே

தேடுபொறி கூகுள் வந்துவிட்ட சூழலிலும்
என் தேடலின் பதில் கிடைக்காது தவிக்கிறேன் கண்மணியே

கூகுள் வரைபடத்தில் எவரையும் கண்டுபிடிக்கும் சூழலிலும்
உன் முகவரி தெரியாது அலைகிறேன் கண்மணியே

நினைத்த இடத்தில் கொண்டு சேர்க்க உபெர் பயன்பாட்டை வந்துவிட்ட சூழலிலும்
உன்னிடம் வந்து சேர முடியாது தவிக்கிறேன் கண்மணியே

முகநூல்தூதர் தூது சொல்ல இருக்கின்ற சூழலிலும்
எனக்கான தூதர் யாரென தெரியாது தவிக்கிறேன் கண்மணியே

காணொளிகளை காண்பதற்கு யுடுயூப் வந்துவிட்ட சூழலிலும்
என் காதல் மொழிகளை கூறாமல் தவிக்கிறேன் கண்மணியே

எத்தனையோ தொழில்நுட்பம் இருந்தாலும் காதல் என்றும்
மாறாத ஒன்று என்று உன் நாணம் தான் சொல்லியது
இத்தனையும் தேவை இல்லை உன் கண்ணிமையின் உத்தரவுக்கு
என் காதல் சொல்லிவிட்டேன் என் அகமுணர்ந்து
உன்னினிய அன்பை பெற..!!!!

எழுதியவர் : எழில் குமரன் (3-Feb-16, 4:29 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 98

மேலே