காதலர் தினம்
உறங்கும் ஹார்மோன்களும் -
தீயாய் பரவ ;
நச்சு கலாச்சாரத்தை-
நெஞ்சிலே பதியவைக்க ;
வியாபார உக்தியின் -
விளம்பரத்திற்கு ஒரு விழா !
காதல் ரசம் சொட்ட சொட்ட ;
கிளு கிளுப்பாய் காதல் வரிகள் ;
செல்போன் வழிதனிலே ;
சிறகடித்து பறக்கிறதே !
வீட்டு பூக்கலும்
வீதியில் திரிகிறதே ;
விவரமின்றி !
சந்தைக்கு வந்த
மொட்டுக்களும் ;
மலராகிரதே !
அன்பை வெளிபடுத்த
அங்கிலேயர் வழியில் ;
உதட்டோடு உதடுவைத்து ;
முத்த மழையில் ;
மொத்தமும் நனைகிறதே !
விழியில் தொடங்கி
இதழில் முடியும்
இந்த காதலும் புனிதமோ ?