கவியில் ஒரு கதை

விதைத்தேன் விலை கண்டேன்
நினைத்தேன் செயல் கொண்டேன்

அலைந்தேன் அருள் பெற்றேன்
அணைந்தேன் காதல் உற்றேன்

வளைந்தேன் வரம் வென்றேன்
தொலைந்தேன் அவள் என்றேன்

கலைந்தேன் கனவென்றேன்
விழித்தேன் வியப்புற்றேன்

அணிந்தேன் அன்பு என்றேன்
துணிந்தேன் துணை கொண்டேன்

வீழ்ந்தேன் எழுச்சி கண்டேன்
விமர்சித்தேன் புரிதல் என்றேன்

நனைந்தேன் காதல் என்றேன்
புனைந்தேன் கவி என்றேன்

வரைந்தேன் அவள் என்றேன்
வகுத்தேன் திட்டம் என்றேன்

விடுத்தேன் தூது என்றேன்
விவரித்தேன் காட்சி என்றேன்

முயன்றேன் நடிப்பென்றேன்
முடித்தேன் கதை என்றேன்

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Feb-16, 1:04 pm)
Tanglish : kaviyil oru kathai
பார்வை : 99

மேலே