பதறும் பெண்மை

பெண்மையது மென்மையாகும்,
பதறும் நெஞ்சமது - மறைக்க தெரியாது -அவருக்கு
பிடிக்காத செயலை சிந்ததாலே,
பயமும் பதற்றமும் கொள்ளும்,
பனிப்போல் கைகளும் குளிர்க்கொள்ளும்,

தூசி போன்ற செயலானாலும்,
துணையவன் கைபிடிகாது செய்ய சிந்தித்தாலே,
துயரம் நெஞ்சில் படர்ந்து,
தலையும் பாரமாகி பதறி,

சிந்தித்ததை துனையவனிடம் கூறி,
சின்ன இதயம் தாங்காது கண்ணிற் வழியும்,
சொல்லி முடிக்கும் முன்னே,

கணவனோ என்ன இது இந்த காரியத்திற்கா,
கலங்கி தவிக்கிறாய் என்று,
கைப்பிடித்து ஆறுதல் கூறியும் ஆறாது,
கவலையில் கலையிழந்து நிற்ப்பாள்,
கரம்பிடித்தவன் முன்னே,

சோலையான பெண் கண்ணிற் காண இயலாது,
சோகம் மறந்து அவள் சோலையாக,
சிரிப்பு காண்பித்து கலக்கம் மாற்றுவான்,
சிறிது சிறிதாய் அழுத்தம் குறைந்து -நீரில்
சிலிர்த்தெழும் பறவை போல முகம் அவள் மலர,
சின்ன சிரிப்பை கண்டதுமே மகிழ்ச்சியில் -வேலை
செய்ய நிறைவாய் செல்லுவான் !!!

பதறும் மென்மையான பெண்மை ...

எழுதியவர் : ச.அருள் (4-Feb-16, 11:45 am)
Tanglish : patharum penmai
பார்வை : 312

மேலே