கொண்டாடப்படாத காதல்கள்---முதல்பூ

இந்த காதல்
ஒரு உண்மை சம்பவம...


அழகிய சிற்றூரில் ஊருக்கு நடுவில் ஒரு ஏரி,ஏரியின் இரு கரை பக்கமும் வீடுகள் ஒரு கரையில் விளையாட்டு மைதானம் ஒருகரையில் சிவாலயம்.சிவாலயம் அருகே வயல்வெளிக்கு செல்லும் பாதை.அந்த பாதையை கடந்தால் வயல்வெளி,வயல்வெளியை கடந்தால் காட்டாறு,காட்டாற்றை கடந்தால் வயல்வெளி,வயல் வெளியை கடந்தால் பக்கத்து கிராமத்தின் அரசு மேல்நிலை பள்ளி.

ஊருக்குள் பொதுவாக இருந்த ஏரி வயல்வெளிக்கு செல்லும் பொது பாத.சாதிகள் பார்க்காமல் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்.காலையும் மாலையும் ஒன்றாக கடந்து செல்லும் மாணவர்கள்.அரும்பு மீசை முளைக்கும் வயதில் அவனுக்குள் ஒரு மாற்றம்.தன்னோடு பயிலும் தோழியோடு ஒரு காதல்.அவனும் அவளும் கண்கள் பேசிக்கொள்ள தினம் பரிமாறி கொண்டது அன்பினை.தனக்கு முன்பும் பின்பும் யாரும் இல்லை என்ற நேரங்களில் கைகள் கோர்த்து பயணம்.

எதார்த்தமாக நண்பர்கள் அந்த காட்சினை கண்டார்கள்.நண்பர்களிடம் சொன்னார்கள் இருவரும் வாழ்வதும் சாவதும் இருவரும் ஒன்றாகவே என்று ஆர்வ கோளறு என்று எண்ணி கொண்டார்கள் நண்பர்கள்.

பள்ளி படிப்பும் முடிந்தது மேற்படிபிற்காக கல்லூரியில் சேர்ந்தார்கள் அவள் மகளிர் கல்லூரியில் ஒரு நகரத்திலும்,இவன் இருபாலர் கல்லூரியில் ஒரு நகரத்திலும்.அன்று தொலைபேசிகள் அதிகம் பயன்பாட்டில் இல்லாதநிலை கடிதங்கள் மட்டுமே இருவருக்கும் அன்பினை பரிமாறிக்கொள்ள.

அவள் கல்லூரியில் படிக்கும்போதே அவளுக்கு வரன் தேட.அன்றுதான் இருவருக்கும் தெரிந்தது வெவ்வேறு சாதி இணைவது கடினம் என்று.இருவரும் கடிதத்தின் வழியாக அழுது தீர்த்தார்கள்.வலிகளும் சோகங்களும் குறையவே இல்லை கூடிகொண்டே போனது.

இருவரும் ஒருநாள் சந்தித்துபேச முடிவு செய்து சந்தித்தார்கள்.முதலில் இருவரும் வீட்டில் பேசி சம்மதம் வாங்க முடிவு செய்வோம்.வெளியில் யாருக்கும் தெரியவேண்டாம் தெரிந்தால் இரு பிரிவினரிடையே பெரும் கலவரம் நடக்கும் என்று பேசி முடிவு செய்தார்கள்.கல்லூரி நாட்களும் முடிந்தது.

சொந்த கிராமத்திற்கு சந்தோசங்களை விட்டுவிட்டு சோகங்களோடு மட்டும் திரும்பினார்கள்.அவரவர் வீட்டில் பேசி பார்க்க கிடைத்தது ஏமாற்றம் மட்டுமல்ல.இவனுக்கு கன்னங்கள் சிவந்தது அவளுக்கு மேனியெங்கும் சிவந்தது.தூது சொல்ல நண்பர்கள் யாரையும் அழைக்கவில்லை.அவரவர் வீட்டிற்கும் அன்று பார்த்த நண்பர்களுக்கு மட்டுமே தெரியும் இவர்களின் காதல்.எங்கும் புகுந்து செல்லும் காற்றிடம்கூட தூது சொல்ல தெரியாமல் துடித்தார்கள்.

மாதங்கள் சில கடந்துசெல்ல,சிவராத்திரி என்று அன்று ஊரே கூடியது சிவாலயத்தில்.மாதங்கள் சில தகவல்களும் முகமும் காணமல் தவித்த இவர்களுக்கு ஒருவரை ஒருவர் கண்டதும் கங்கை நதியாக பெருக்கெடுத்து ஓடியது இருவருக்கும்.கண்கள் மட்டும் வலியோடு நலம் விசாரித்து கொண்டன.இதழ்கள் பேச துடித்தும் மௌனங்கள் கொண்டது உள்ளம் துடிதுடித்தது.அவரவர் அருகே அவரவர் குடும்ப உறவுகள்.எல்லோரும் ஒன்றாக கூடி இருக்கும் ஆலயத்தில் அங்கு சாதிகள் பேசப்படவில்லை.

கூட்ட நெரிசலில் குடும்ப உறவுகளை விட்டு சிறிது நேரம் விலகி நிற்க.ஓடிவந்து முதல்முறை கட்டியணைத்து கொண்ட உள்ளங்கள் கதறி அழுதும் அங்கு யாருக்கும் கேட்கவில்லை.அவர்களை மறைத்து நின்றது அன்று பார்த்த நண்பர்கள் கூட்டம்.விழிகளும் கன்னங்களும் கண்ணீரில் குளித்தது, உள்ளங்கள் வலியோடு துடித்தது.காதல் கொண்ட உள்ளங்கள் இரண்டும் பேசிகொண்டது.அருகில் இருந்த நண்பர்களுக்கு தெரியவில்லை.அவர்களின் முடிவுகள் என்னவென்று.அலைமோதிய கூட்டம் அவரவர் குடும்பத்தோடு வீட்டிற்கு திரும்பியது.

அடுத்தநாள் அவள் அவளின் தோழிகளை சந்தித்து சந்தோசமாக பேசினாள்.பக்கத்து வீடுகளில் இருந்த சிறுவர்,சிறுமிகளோடு கொஞ்சி பேசினாள் விளையாடினாள்.இவளின் மாற்றத்தை பார்த்த அவளின் பெற்றோர்களுக்கு உள்ளமெங்கும் சந்தோசம்.அன்றே மாப்பிள்ளை வீட்டினார்க்கு தகவல் கொடுத்தார்கள்.அடுத்த வரம் வரவேண்டுமென்று.

அவனும் அவன் நண்பர்களோடு சந்தோசமாக சிரித்து பேசினான்.வீட்டில் உள்ளவர்களிடம் சந்தோசமாக பேசினான்.இவன் மாற்றத்தை கண்டு அவன் குடும்பத்தாரும் சந்தோசம் கொண்டார்கள்.இவன் மாற்றத்தை கண்ட நண்பர்களுக்கோ சந்தோசத்துடன் கூடிய சந்தேகமும் ஏற்பட்டது.அவர்களின் சந்தேகம் பொய்யாகவில்லை.அவளை காண சென்றார்கள்.அவள் வீதியில் விளையாடிதை கண்டு இவர்களின் சந்தேகம் தீவிரமடைந்தது.காத்திருந்தார்கள்.

விபரீதம்.மறுநாள் காலையில் இவன் இவன் வீட்டில் உயிர் இல்லாமல்.உறவுகளும் நண்பர்களும் துடித்துபோக.அங்கு அவளும் அவள் வீட்டில் உயிர் இல்லாமல்.இருவேறு பிரிவினரும் அழுது தீர்த்தார்கள்.இவர்களின் கையில் இருந்த கடிதத்தில் வார்த்தைகள் மாறாமல்.

""சாதி பார்க்காமல் செநித்தோம் இருவரும் திருமணம் என்றபோது சாதி வந்தது.இன்று அழுவதும் சிரிப்பதும் எந்த சாதி என்று தெரியவில்லை.நாங்கள் ஓடிபோய் திருமணம் செய்திருந்தால் எத்தனைபேர் விதவை,எத்தனை குழந்தைகளுக்கு அப்பா இல்லாமல் போய் இருப்பார்கள்.எங்கள் சந்தோசத்திற்காக மற்றவர்களின் உயிரினை வங்க விரும்பவில்லை.எங்களின் உயிரினை ஒருவருக்கொருவர் அர்பணித்து கொள்கிறோம் நாங்கள்""

நேசித்த இதயங்கள் சேர்ந்துவாழ நினைத்திருந்தால் சில உயிர்கள் பலியாகிருக்கும்.ஒரே இடத்தில் சேர்ந்து இறந்திருந்தாலும் சில உயிர்கள் பலியாகிருக்கும்.காவல் நிலையத்திற்கு இரண்டு குடும்பமும் சென்று இருக்கும்.இரு குடும்பங்களின் கௌவுரமும் சாதி வன்முறைகள் இல்லாமலும் சேர்ந்தார்கள் மரணத்தில்.

குறிப்பு::"இவர்களின் காதல் இரு குடும்பத்தினருக்கும் அந்த நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும்."

இன்று அவர்களின் நினைவுகள் மட்டும் எங்கள் நெஞ்சில் நீங்காமல்.

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Feb-16, 10:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 102

மேலே