பொன் நாள்

"சரண்! என்ன செய்கிறாய்.." என்று கேட்டவாறு மகனை நோக்கி வந்தவர் ஒரு கணம் திகைத்து நின்றார்.

ஆம், அது ரிமோட் பொம்மை. அதி கூடிய விலை கொடுத்து அவனுக்காகவே கொண்டு வந்த பிறந்த நாள் பரிசு. நேற்றிரவு தான் கொண்டு வந்து இருந்தார். அப் பொம்மையின் கை, கழுத்து, கால் என வேவ்வேறாக உடைத்து கொண்டிருந்தான். தந்தையோ கோபத்தின் அதி உச்ச நிலையை அடைந்தவராக பிறந்த நாள் என்றும் பாராமல் தந்த அடிகள் சரணின் முதுகை பதம் பார்த்தன.

பலசரக்கு கடையின் உரிமையாளர் முருகன். அவரது மனைவி சரணை இவரிடம் தந்து விட்டு பிரசவத்தின் போதே இறந்திருந்தாள் தன்னிரு மகள்களையும் செல்ல மகன் சரணையும் பாசமாக வளர்த்து வந்தார். மகள் மார் இருவரையும் உயர் கல்விக்காக அனுப்பியிருந்த நிலையில் சரண் மீது பாச மழை பொழிந்தார்.

அவன் விரும்பியோ விரும்பாமலோ அனைத்தையும் அவனுக்காக வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு அவர் ஆசையுடன் வாங்கி கொடுத்தவற்றை அவன் உடைத்து துஷ்பிரயோகம் செய்தது அவருக்கு கவலையை தந்தது. தொடர்ந்து அவன் இவ்வாறு செய்தமையானது அவருக்கு எரிச்சலையும் நட்டத்தையும் தந்தது.

சரண் தற்போது பெரியவனாகியும் அவனது நடவடிக்கைகளை விடவில்லை. இப்போது அவன் தன் பொருட்கள் மட்டுமன்றி ஏனையோரின் பொருட்களையும் உடைக்க தொடங்கினான். எல்லோரும அவனை "அநியாயக்கார சரண் என திட்டலாயினர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இவனை பலமுறை எச்சரித்த போதும் 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போல இருந்தான். இறுதியில் இது முருகனுக்கு தெரிய வரவே அவரது கோபம் இன்னும் அதிகரித்தது.

அன்று அவன் பாடசாலையில் ஏனையவர்களதும் தனதும் உடைந்த பாகங்களை கொண்டு செய்த சயு இயந்திரத்தை கண்ட கணித பாட ஆசிரியர் அவ்வியன்துரத்துடன் சேர்த்து அவனையும் காரியாலயத்தில் ஒப்படைத்து அதிபரிடம்
"ஐயா...! இவன் சரியாக பாடத்தை கவனிப்பதில்லை... எல்லாப் பொருட்களையும் உடைத்து அதனை கொண்டு ஏதோ இயந்திரம் செய்ததாக ஏனைய பிள்ளைகளையும் குழப்புகிறான்.."

அதிபர் எவ்வாறு தண்டிப்பாரோ, தந்தையிடம் இன்று எவ்வாறு சமாளிப்பதோ என்று பயந்து போயிருந்த சரணுக்கு அதிபரின் வார்த்தைகள் புது உற்சாகத்தை தந்தன...

" இவற்றை எவ்வாறு செய்தாய்.." எனக் கேட்ட அதிபர் அறிவுரை வழங்கினார்.

"சரண்.. உனது இந்த முயற்சியை பாராட்டுகிறேன்.. அனால் இதனால் ஏனையவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வரை இருக்கட்டும்..." தொடர்ந்தார்....
அவ்வியந்திரத்தை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

ஒருவாரத்தின் பின் பாடசாலை விஷேட காலை கூட்டத்தின் போது அதிபர் உரையாற்றினார்.

"..........மு.சரண். இவன் இப் பாடசாலையின் பெருமைக்குரிய மாணவன். இவன் புதிதாக கடுப்பிடித்த சிறு கைத்தொழில் இயந்திரத்தினை வடிவமைக்க பின்புலமாய் இருந்தது ' துவண்டுவிடாத முயற்சி' ஒன்றே..... இதனை சென்ற வாரம் நான் லல்வித் திணைக்களம் ஊடாக அரசுக்கு தெரியப்படுத்தி இருந்தேன். இளம் சாதனையாளர் திட்டத்தின் கீழ் இவனுக்காக இந்த "சிறந்த கண்டுப்பிடிப்பாளர்" விருது வழங்கப்படுகிறது.

......வழங்குவதற்காக மத்திய அரச புது முயற்சி சார் அமைப்பு அமைச்சர் சா. புண்ணியமூர்த்தி அவர்களை அழைக்கிறேன்."

பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் அவன் விருதை பெற
விடயமறிந்து வந்த தந்தை ஆனந்தக் கண்ணீருடன் அவனை தழுவிக்கொண்டார்.

அன்று "ரிமோட் பொம்மை" க்காகப் பட்ட அடி...
இன்று கிடைத்த அரவணைப்பு...

அவனுக்கு எதோ இனம் புரியாத உணர்வுடன் கூடிய உற்சாகத்தை தந்தது.
இந்நாள் அவனுக்கு பொன்னாள்..
பலத்த கரகோசங்கள் விண்ணைத் தாண்டி ஒலித்துக் கொண்டே இருந்தன...

எழுதியவர் : தமிழ்நிலா (6-Feb-16, 9:27 am)
சேர்த்தது : தமிழ்நிலா
Tanglish : pon na
பார்வை : 187

மேலே