அவளுக்கு வருமா

அவளுக்கு வருமா ?
அந்தி நிலா
சளசளக்கும் நீரோடை !
துரத்திக் கொண்டே வரும்
கடல் அலைகள்!
மலையை விழுங்கும்
முகில் கூட்டங்கள் !
தென்றல் வீசிடும்
மலர் சோலைவனங்கள்
வரப்போரம் காற்றினில்
அசைகின்ற நெற்பயிர்கள் !
பச்சைக்கிளிகளின்
வளைந்த மூக்குகள் !
கொக்குகளின் நீண்ட
அலகுகள் !
யானைகளின் அழகான
தந்தங்கள் !
குயில்களின் கூவல்கள்
மயில்களின் நாட்டியங்கள் !
மறந்து போனதுவே !
அவளைப் பார்த்த பிறகு….!
மீண்டும் நினைவுக்கு வந்தன !
பிப்ரவரி திங்கள் பதினான்கு !
அவளுக்கு வருமா நினைவு !
---- கே. அசோகன்.