வீரனே சகோதரனே

பனியின் பிடியில்
பணி உன் வாழ்க்கை
படைத்தவன் மறந்து போக எமை
பாதுகாத்து உயிர் நீர்தாய்.....

கடும் காற்றும்
கண்ணீர் சிந்தியது உன் போன்றவரின்
கடமையை கண்டு......

பூமியின் சோகம் எதுவாகினும்
பூலோக மனிதா உன் ஒரே சோகம்
பூவாய் எமை பாதுகாப்பதே.......

நிலம் காதல் தோல்வியில்
நிசப்தம் இன்றி பிரிந்தாலும்
நிதான உன் மீட்பு
நிலைகுலைந்த எமை நிமிர்த்திடும்.....

சுனாமிகள் பல வந்தாலும்
சுமையாய் எமை எண்ணாமல்
சுமை தாங்கும் ஏணியாய் - தோலில்
சுமந்தவனே......

உம் போன்றவரின் தியாகம்
உலகை நிலைகுலையாமல்
உருண்டோட வைக்கிறது.....
உன் குலம் மட்டும் பாரா
உன் சேவை - தோற்கடிக்கும்
உலகின் தான் என்ற எண்ணத்தை.....

எதிர்ப்பவன் நீ பழகிய முகமோ, நண்பனோ
எதிர்ப்பாய் தேசத்துக்காக
உம் தேச பற்றுக்கு
தலை வணக்கும்
இத் தேசம்.........

-மூ.முத்துச்செல்வி

*********************************************************************
ராணுவ வீரருக்கு சமர்ப்பணம்.........

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Feb-16, 8:15 pm)
பார்வை : 71

மேலே