வர்ஷிதா சொன்னால் புரியாதா
"வர்ஷிதா ! நீ எல்லாம் புரிந்துதான் பேசறியா? என்னோட வருமானம் என்னனு உனக்கு நல்லாவே தெரியும்... கொஞ்சம் யோசி.... பேசறது சரி என்று எனக்கு தெரியலே.... " கொஞ்சம் அழுத்தமாகதான் பேசினான் வருண்....
"என்ன சொல்றீங்க? கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆயாச்சு... இன்னும் ஒரு குடிசை வாங்க முடியலே.... கொஞ்சம் இங்க அங்கே லோன் போட்டு ஒரு சின்ன வீடு வாங்கலாம்னு சொன்னா? என்னமோ என்மேலேயே குத்தமா சொல்றீங்க? " வஷிதாவிற்கு தான் பேசுவது சரி என்றுதான் தோன்றியது...
வருண் !! ஒன்றும் பெரியதாய் படிக்கலே.... ஒரு தனியார் அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிகிறார்..... மாதம் ரூபாய். 10000/- வருகிறது ... வர்ஷிதாவும் ஒன்றும் வசதியான குடும்பம் கிடையாது... அவள் வேலைக்கு போகவில்லை.... இவர்களுக்கு 3 குழந்தைகள்... இரண்டு பெண் ஒரு பையன்... எல்லோரும் படிக்கிறார்கள்..... வரும் வருமானம் குடும்பம் நடத்தவே சரியாக இருக்கிறது... அதுவும் 20 தேதி தாண்டினால் கட்டாயம் முன் பணம் வாங்காமல் இருக்கமாட்டார்.... இவருக்கு வயது 54 ஆகிறது.. இன்னும் மிஞ்சி போனால் 4 ஆண்டுகள்தான் வேலை.... ஒய்வு கொடுத்து விடுவார்கள்....ஓய்வூதியம் எல்லாம் கிடையாது..... பி.எப். எல்லாம் ஒன்றும் பெரியதாய் சேரவில்லை.... இவரை நிரந்தர பதவியில் நியமிக்காமலே ரொம்ப காலம் பணியில் இருந்தார்... அதனால் இந்த 4 வருடங்கள்தான் பி. எப். பிடிப்பு எல்லாம் ,,,,
இப்பொழுது இருப்பது சிறிய வீடுதான் என்றாலும் அதற்கு வாடகை, தண்ணீர், மின்சாரம், என்று மாதம் ரூபாய். 4000/- போய்விடும்.. பின்? மீதம் உள்ள ரூபாய் . 6000ல் எதை விட, எதை செய்ய?
இப்படி ஒரு சூழ்நிலையில்தான் வர்ஷிதா வீட்டு கடன் பற்றி பேசியதில் எரிச்சல் வந்தது வருணிற்கு...
கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்தார்...
" இங்க வா வர்ஷிதா! ... குழந்தைகள் பெரியவர்களாய் ஆயாச்சு.... நமக்கு பொறுப்பு , கடமை இன்றும் அதிகமா இருக்கு இப்ப போய் நீ சின்ன குழந்தை போல?? என்ன இது? ஒன்று இல்லை , இரண்டு இல்லை ருபாய். 15 லட்சம்... முடியற காரியமா? கட்டாயம் கனவிலேதான் முடியும்... பெண்கள் சீக்கிரத்தில் கல்யாணத்திற்கு தயாராகிவிடுவார்கள் .... என்ன செய்யப் போறோம்? இருக்கிறதை வெச்சுண்டு என்ன பண்ணலாம்னு ராவும், பகலும் மண்டையை போட்டு உளிக்கிண்டு இருக்கேன்... நீ என்னடானா?" சற்று கோபமாகத்தான் பேசினார் வருண்...
வர்ஷிதா சமாதானம் ஆனதாய் தெரியவில்லை... தொடர்ந்தாள்... " ஒன்னும் செய்யப்போறதில்லை நீங்க! வெட்டி பேச்சுதான்...." நொந்து அங்கு நிற்காமல் உள்ளே சென்றாள்...
வருண், அதை பொருட்டாய் எடுத்துக்கொள்ள வில்லை... அவ்வப்போது நடப்பதுதான் இந்த விவாதம்....
காலம் ஓடியது.... பெரியதாய் ஒரு மாற்றமும் இல்லை.... வர்ஷிதாவின் புலம்பல், அதற்கு மதிப்பளிக்காத வருணின் செயல் என்று...
ஒரு வழியாக அவர்கள் மகன் டிப்லோமா முடித்தான்.... யார்யார் காலிலோ விழுந்து எப்படியோ ஒரு நல்ல வேலையில் அமர்த்தினார் வருண்.. அடுத்த மாதம் இவர் ஒய்வு பெறுகிறார்.. மனதிற்கு கொஞ்சம் நிறைவு ஆனது... அவர் தவித்த தவிப்பு.???
பெண்களில் மூத்தவள் 12ம் வகுப்பும் சிறியவள் 10 வகுப்பும் படிக்கிறார்கள்.....
மனதிற்குள் பயமாகத்தான் இருந்க்கிறது வருணிற்கு...என்ன செய்வது... ஒரு மாதத்திற்கப்புறம்? நிலைமை? பையன் நாள் வேலையில் அமர்ந்தாயிற்று... ஆனாலும் முழு பொறுப்பு அவன் தலையிலா?
"என்ன செய்யலாம்? ஒன்னும் புரியலே?" ஏதேதோ எண்ணங்கள் மனதில்...
ஒய்வு பெரும் நாளும் வந்தது.... மாலையெல்லாம் போட்டார்கள்... கையில் மலர் கொத்து... கையில் மட்டும் ஒரு பைசா இல்லை... என்ன செய்ய?
வீட்டிற்கு வந்தார்.... வர்ஷிதா அவள் வழக்கம் போல் தன வேலையில், டி.வி. யில்....
மறுநாள் காலை தன நண்பரோடு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நடை பயிற்சி செய்ய சென்றார்.. அவரிடம் தன நிலைமையை விளக்கினார்..
நண்பர் " வருண்! இந்த கால கட்டத்தை எல்லோரும் ஏற்கத்தான் வேண்டும்... ஒரு இரண்டு நாட்கள் எனக்கு அவகாசம் கொடு... யோசிக்கலாம்..." நிதானமாய் சொன்னது இவருக்கு கொஞ்சம் மனதிற்கு இதமாய் இருந்தது...
ஒரு வாரம் கழித்து நண்பரை சந்தித்தார் வருண்... அவர் ஒரு தனியார் அலுவலகத்தில் கணக்கு எழுத ஆள் தேவை என்றும் அதற்கு ரூபாய்.6000 கொடுப்பதாய் கூறினார்.. இவர், உடனே ஒப்புக்கொண்டார். பக்கத்திலேயே இருந்தது அலுவலகம்... புது வேலைக்கு போக ஆரம்பித்தார்.... 3 மாதங்கள் சென்றன... இவரது திறமை, நேர்மை கண்டு முதலாளி இவருக்கு ரூபாய்.7500/- சம்பளம் உயர்த்தினார். சந்தோஷப்பட்டார் வருண்.....
6 மாதங்கள் கடந்தன..... தெரிந்தவர் மூலம் மகனுக்கு துபாயில் வேலை நியமம்.... விசாவும் வந்துவிட்டது.... நம்பமுடியவில்லை வருணிற்கு.... சந்தோஷ அலைகள் அவர் மனதில் ....இதோ பறந்துவிட்டான் மகன்...
இரண்டு வருஷம் கழித்து இங்கு வந்தான்..... நல்ல சம்பளம்.. ஓரளவிற்கு கையில் பணம் சேர்ந்தது....
"அப்பா! முதலில் ஒரு சிறிய வீடு பாருப்பா... கொஞ்சம் பணம் இருக்கு.... வங்கியில் கொஞ்சம் கடன் வாங்கலாம்.... அம்மா ஆசையை நிறைவேற்றுவோம்! " என்றான்... கட்டி தழுவிக்கொண்டார் வருண்....
வர்ஷிதா முகத்தில் என்றும் இல்லாத ஒரு பொலிவு...
மற்றுமொரு குடும்பத்தோடு வருகிறேன்...
மைதிலி ராம்ஜி