உனக்காக

நான் இமை மூடி
துயில் கொள்ள
நீ இருள் சேமித்த
இடம் தான்
உன் கூந்தல்..!!

சப்தமில்லா இடத்திலும்
என்னுடன் காதல் பேசும்
இரு மொழிகள்
உன் கண்கள்..!!

நான் உறங்கும்
சிகப்பு வண்ண மெத்தை
உன் கீழ் உதடு..
குளிர் மறைக்கும்
அதே வண்ணப் போர்வை
உன் மேல் உதடு..!!

பத்துயரப் பூக்கள்
உன் கை விரல்கள்..!!

பாலைவனப் பூக்கள்
உன் பாத சுவடுகள்..!!

காதலே...

அழகிலும்
அன்பிலும்
உனை மிஞ்சிட
ஆளில்லை
என் கண்களுக்கு..!!

என் எதிர்காலக் கதிரவன்
உன் பிடியினில்..
என் எதிர்காலச் சந்திரன்
உன் மடியினில்..!!

நான் உன்
இடப்புறமோ
வலப்புறமோ
ஆனால் இன்பம்
மட்டுமே சிந்தும்
என் இதழ்கள்..!!

காதல் கனிந்து
கல்யாணமாகும் வரை
காத்திருப்பேன் காதலோடு..!!


என் காதலுக்குச் சமர்பணம்...

செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (13-Feb-16, 8:52 pm)
Tanglish : unakaaga
பார்வை : 248

மேலே