பெப்ரவரி-14

அங்கங்கே கூடுவீர்
அங்கமெங்கும் தொடுவீர்-கேட்டால்
பங்கமில்லை என்பீர்
சிங்கம் அவன் எனக்கு
தங்கம் அவள் எனக்கு என
வங்கம் எங்கும் பொங்குவீர்


நுங்குத் தண்ணீராய்
வாசப் பன்னீராய்
நேசக்காதல்- செந்நீர்
கூசப்புகுந்தது என்பீர்


பசிமுழுதும் பொறுக்க
நிசி முழுதும் விழித்து
குஷியாய் கதைத்து
ஆண் பெண் வாடையை
தொலைபேசியில் முகர்ந்து


கலை கூடத்திலும்
கலை பீடத்திலும்
சிலை, மாடத்தின் ஓரத்திலும்
நல்லார் வேடத்திலும்
பயிலும் பாடத்திலும்
மிதக்கும் ஓடத்திலும்

பூந்தோப்பிலும்
மாந்தோப்பிலும்
பழ ஆப்பிளும்
சில மரங்களின்
பாதுகாப்பிலும்

அடுத்தவருக்கும்
ஆன்றோருக்கும்
அன்னையருக்கும்
அஞ்சி அஞ்சி
கொஞ்சி செஞ்சு
எஞ்சியது என்ன?
பத்து மாதத்தில்
குஞ்சொன்றை
கொஞ்ச வேண்டி
வந்ததென்ன?


மங்கையர் காதலித்தாராம்
ஆடவர் கற்பழித்தாராம்
ஆண்டவன் அதனால் அன்பளித்தானாம்
குடும்பமானத்தை அழித்தானாம்


வாழ்க காதல்
வாழவேண்டிய
நங்கையரே ஏன்
அனாவசிய சாதல்
இது அவசரக்கூதல

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (13-Feb-16, 10:08 pm)
பார்வை : 135

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே