பதில் சொல்லடித் தோழி

என் கனவில் வந்த
கள்வன் யாரோடித் தோழி...?
அவன் என் கன்னத்தில்
இட்ட முத்தத்தின் ஈரம்
நனவினிலும் தெரிகிறதடி....!
அவன் என்னில் செய்த
மாற்றம் தான் என்னடி..?
இதுவரை என்னிடம்
தோன்றாத நாணம்
இன்று தோன்றுகிறதடி...!
அந்த கள்வனின்
பெயர் கூட அறியேனடி....!
ஆனால்
அவன் கண்களில்
மின்னிய காதல்
இன்று....
என் மனதிலும் தோன்றியதடி....!
நேற்று என் கனவில் வந்து
என் கண்களில் நிறைந்து
எனது உள்ளம் திருடிய
அந்த மாயக் கள்வன்
நனவினிலும் வருவானா.....?
அல்லது
கனவினில் மட்டுமே
வருவானோடி தோழி....!
அடியே.....!
கிளித் தோழி.....!
உன்னிடம் தானே
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
ஏதேனும் பதில் சொல்லடித் தோழி....!