தீராத வார்த்தைகள்

சொல்ல சொல்ல தீராத வார்த்தைகளாய்
ஊற்றாக கவிதை தான் கொட்டுதடி

அள்ள அள்ள குறையாத தீர்த்தந்களாய்
உந்தன் சிந்தனைதான் சிந்துதடி

சிந்த சிந்த சிதறாத முத்துக்களாய்
உந்தன் புன்னகைதான் பூக்குதடி

சிரிக்க சிரிக்க அடங்காத ஆனந்தமாய்
இன்பம்தான் கடலென பொங்குதடி

அலை அலையாய் சீறுகின்ற சமுத்திரமாய்
எல்லை மீற ஆசைதான் தூண்டுதடி

ஆசை ஆசையாய் எரிகின்ற நெருப்பாய்
உந்தன் பார்வை தான் கொல்லுதடி

எழுதியவர் : சதீஷ்குமார் (13-Feb-16, 10:28 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே