உலக யோகா தினம்
யோகாவை செய்யாமல் வளமில்லையே
யோகாவை செய்தாலே நோயில்லையே
தினமும் அதிகாலை எழுந்து நாம் செய்யும்
மனஉடல் பயிற்சிக்கு ஈடுஇணை ஏது?
(யோகாவை செய்யாமல் வளமில்லையே
யோகாவை செய்தாலே நோயில்லையே)
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த
யோகரிஷி பதஞ்சலியின் படைப்பே இது
காலங்கள் சென்றிடினும் கோலங்கள் மாறிடினும்
மாறாத மனிதவளக் கலைதான் இது
நமக்கென்று இல்லாமல் உலகோரும் நன்மைபெற
பாரத அரசாங்கம் வழி வகுத்தது!
ஐநாவின் சபையினிலே அனைத்துலக நாடுகளும்
அங்கீகாரம் செய்த பொன்னாள் இது
அதுதானே அகில யோகா தினம்
யோகாவை செய்யாமல் வளமில்லையே
யோகாவை செய்தாலே நோயில்லையே
தினமும் அதிகாலை எழுந்து நாம் செய்யும்
மனஉடல் பயிற்சிக்கு ஈடுஇணை ஏது?
(யோகாவை செய்யாமல் வளமில்லையே
யோகாவை செய்தாலே நோயில்லையே)
இன்று உலக யோகா தினத்தில் நாம் ஒவ்வொருவரும்
யோகாவை சிறப்பாக செய்து நம் உடலையும் மனதையும்
செம்மை படுத்தி மெய்யான மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ராமசுப்பிரமணியன் எனும் ஜாய்ராம்