ஒபாமா ! வெல்வது இயலாது !

அறிவியலை கணிதத்தை
படியுங்கள்
வேலைப் பசியோடு
இருக்கும்
சீன இந்திய
இளைஞர்களை வெல்ல
என்று சொல்லியிருக்கிறார் ஒபாமா !

உழைக்காமல் உண்டு
கொழுத்து
பொழுதைப் போக்கும்
அமெரிக்கர்களால்
போட்டியிட இயலாது !

நீருக்குள் அழுத்தப்பட்ட
மாணவர்களாய்
சமூகரீதியாய் ஒடுக்கப்பட்ட
மாணவர்கள்
இந்திய கிராமங்களிலிருந்து
அறிவு மூச்சுவாங்க
ஆவேசமாய் வருகிறார்கள் !
வெல்வது இயலாது !
ஒபாமா ! வெல்வது இயலாது !

எழுதியவர் : (15-Jun-11, 11:25 am)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 300

மேலே