வெள்ளி அலைகள்

பாய்ந்து வரும்நீ ரோடை தனிலே
பளிச்சிட்டு வெள்ளி நீரலைகள் மின்னுதே
மின்னிடும் நீரலையில் துள்ளுதே மீன்கள்
பருகிட ஆவலும் துள்ளுதே நெஞ்சிலே
----நிலை மண்டில ஆசிரியப்பா
பாய்ந்து வரும்நீரோ டைதன்னில் பாராய்
பளிச்சிட்டு வெள்ளியாய் நீரலைகள் மின்னுதே
மின்னிடும் நீரலையில் துள்ளுதே மீன்கள்
பருகிட துள்ளுதே நெஞ்சு
---இன்னிசை வெண்பா