வானம்பாடியின் பாடல்

அகன்று விரிந்த அழகிய வானில்
சிறகு விரிக்கும்வா னம்பாடி பாடுவது
காதல் கவிதையோ கந்தர்வ கானமோ
கண்ணீர் கதையோவே ரெந்தவொரு சோகமோ
சொல்லிடு வீர்தெரிந் தால்

---கவின் சாரலன்

ப ஃ றொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (14-Feb-16, 4:55 pm)
பார்வை : 133

மேலே