மௌனம் பேசுமோ

{ மௌனம் பேசுமோ காதல் வீசுமோ }
கண்ணோடு கனவுகள் மிளிர,
நெஞ்சோடு நினைவுகள் துளிர,
உன்னோடு கைக்கோர்க்க துடித்திருக்கிறேன்,

கரைந்திட ஆசை உண்டு உன் அன்பு கடலில்,
துளிர்த்திட ஆசை உண்டு உன் மனதின் செடியில்,
மலர்ந்திட ஆசை உண்டு உன் வீட்டுத் தோட்டத்தில்,

நேசத்தின் வீச்சினில் எனை கவிழ்த்தாய்,
நெடுநாளாய் எனக்காய் காத்திருந்தாய் - இன்று
நெஞ்சில் பூவாய் மலர்ந்தேளுந்தாய்,

காதல் சொல்ல முடியவில்லை - உன்
கண்ணை கண்டால் வார்த்தையில்லை,

மௌனத்தின் பொருளை நீயே உணர்வாயோ ?
மலர் சுட வருவாயோ - அல்லது
மங்கை மனதை வதைப்பாயோ ?
மறந்திடுவேன் நினைத்தாயோ ?
மறைந்திடுவேன் அறிவாயோ ?

இசைந்தாடும் ஆசையெல்லாம் நிறைவு கொள்ளுமோ ?
இல்லை மண்ணில் புதைந்தே என்னை கொல்லுமோ ?

நேசம் பேச மொழியின்றி மௌனத்தில் ....

எழுதியவர் : ச.அருள் (15-Feb-16, 10:01 pm)
பார்வை : 301

மேலே