பிணக்கு

மாதம் ஒரு முறை கடிதம்
என்பதில் இருந்து
மணிக்கொரு குறுந்தகவல்
என்றாகி விட்டது
அப்பாவிற்கும்
எனக்குமான
பாசப் பரிமாற்றம்..
அடுத்த முனையில்
மடிக்கணணியும்
கையுமாய் அப்பா
தூக்கம் தொலைத்து
இரவில் விழித்திருக்க
இந்த முனையில் நான் .
எனக்குக் கிடைக்கும்
நேரத்தில் ஏதாவது
எழுதியே தீர வேண்டும்..
மூன்று வயதில்
பத்து வரை எழுத
கற்றுக் கொடுக்கும் போது
தொடங்கிய முரண்பாடு
முப்பது வயதிற்குப் பின்னும்
முடியவில்லை!!
எனக்கும் அப்பாவிற்கும்
எழுத்திலே ஆரம்பித்த பிணக்கு
எழுத்தாகவே தொடர்கிறது...

எழுதியவர் : சிவநாதன் (17-Feb-16, 1:27 am)
பார்வை : 139

மேலே