நியாயம் எனும் கனிகள்

உண்மைகள் கருகிப்போன மயில் இறகு ஒன்று மை சுமந்து திரிந்தது,
கருகிப்போன உண்மைகளை ஓவியம் வடிக்க இடம் தேடி.
கனவுகள் கருகிப்போன கரம் ஒன்று உண்மையை சுமந்து திரிந்தது,
கருகிப்போன கனவை உண்மையாக்க இடம் தேடி.

கனவுகளை உண்மையாக்கும் காகிதம் ஒன்று இருளில் அடைக்கப்பட்டு இருந்தது,
ஒளி எனும் வலியை நெருங்க விடாமல்...

உண்மைகளும் கனவுகளும் சிறைபிடிக்கப்பட்டது,
இந்த இருள் எனும் பொறாமை தீயால்.
ஒளி எனும் நீதி மன்றமும் கருகிப்போனது,
இந்த பொறாமை எனும் காட்டுத்தியால்.

மரத்தை விட்டு பிரிந்த நியாயம் எனும் கனிகளோ,
மண்ணில் சென்று புகுந்ததும் மீண்டும் விதையாக பிறக்கத்தான்.
கனி மரத்தை விட்டு சென்றாலும் அவை மண்ணில் சென்று புகுந்தாலும்,
மீண்டும் விதையாக பிரக்கத்தனே தவிர மண்ணோடு மண்ணாக கருக அல்ல.

எழுதியவர் : Mohammed Naflan Malaysia (22-Feb-16, 6:48 pm)
சேர்த்தது : நப்லான்
பார்வை : 91

மேலே