கருவுற்ற குழந்தை

கருவறையில் வளர்ந்து நிற்கும் மழலையே
உந்தன் வரவை எண்ணி இங்கே உந்தன் அன்னை காத்து நிற்கிறாள்!
உந்தன் சிறு பாதம் உலகை அளக்க புறப்பட வளர்ந்து விட்டது!
உந்தன் கைகள் உந்தன் அன்னையை தழுவி அணைக்க துளிர்த்து நிற்கின்றது!
உந்தன் கண்கள் பூ உலகின் வனப்பை ரசிக்க போகின்றது!
உந்தன் வாய் (குரல்) நந்தவனத்தின் பட்சிகளை போல அழகாய் பாட போகின்றது!
உந்தன் ஒவ்வொரு உருப்பம் இந்த பரந்த உலகை தவழ்ந்தும், நடந்தும், ஓடியும் கடக்க போகின்றது!
இவற்றை எல்லாம் நீ நடத்துவதற்கு என்னும் சில காலமே உள்ளது!
அதுவரை உந்தன் அன்னையின் கரு என்னும் காவி மெத்தையில் துயிளுடன் ஓய்வெடுப்பாய் எங்கள் செல்வமே!

எழுதியவர் : அனோஜன் அஜன் (25-Feb-16, 10:45 pm)
பார்வை : 134

மேலே